நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற 2 வேடங்களில் நடித்திருக்கிறார். குண்டுவெடிப்பு சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மைக் மோகன் நடித்துள்ளார். பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ரம்யாகிருஷ்ணன் என பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அறிவித்த பிறகு, வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இருக்கிறது. ஏனெனில் கடந்த முறை லியோ படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை தந்தது.
அதனால் இயக்குனர் வெங்கட்பிரபு தரப்பில் தி கோட் படத்தை இயன்றவரை மிக சிறப்பாக தர வேண்டும் என்றும் விஜய் தரப்பில் ஆரம்பத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் படம் பார்த்த விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி அர்ச்சனா குடும்பத்தினர் படம் சிறப்பாக உள்ளதாக, வெங்கட்பிரபுவை பாராட்டி இருக்கின்றனர்.
அதிலும் நடிகர் விஜய், நான் அவசரப்பட்டு விட்டேன் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு படத்தில் உங்கள் இயக்கத்தில் நடித்திருக்கலாம் என்று வெங்கட்பிரபுவை பாராட்டும் போது கூறியதாகவும் ஒரு தகவல் பரவியது. அந்தளவுக்கு விஜயை தி கோட் படம் கவர்ந்துள்ளது.
இதுவரை 3 பாடல்கள் வெளியான நிலையில், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. அதன்பிறகு இன்னும் 2 பாடல்களும் அடுத்தடுத்து குறிப்பிட்ட தேதிகளில் வெளியாக இருக்கின்றன. வருகிற செப்டம்பர் 15ம் தேதி தி கோட் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்போது தி கோட் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 15ம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் தி கோட் படம் ரிலீஸாகிறது. அதனால் முதல் நாளிலேயே வசூல் பன்மடங்கு பெருகி எகிறி அடிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் அஜீத்குமார் நடித்த வலிமை படம் இதே போல் தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.





