- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்காத இயக்குனர் பா ரஞ்சித், இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு...

தங்கலான் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்காத இயக்குனர் பா ரஞ்சித், இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு – கோலிவுட்டில் பரபரப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் மூலம் இயக்குனராக ரசிகர்களுக்கு அறிமுகமான அவர் கபாலி, காலா என்ற அடுத்தடுத்த படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ஆரம்பமே பா ரஞ்சித்துக்கு ரஜினி படங்களை இயக்கிய பெரிய அளவில் அவருக்கு பப்ளிசிடியாக அமைந்தது.

இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து மெட்ராஸ் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் தங்கச்சுரங்கத்தில் பணிசெய்த அடிமை மக்களின் வாழ்க்கை முறையை, அதே காலகட்ட கதைக்களத்தில் சொல்லும் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்துக்கு சர்வதேச அளவில் பல விருதுகளும் கிடைக்கும் கலைப்படைப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பா ரஞ்சித் தனது படங்களில் பெரும்பாலும் மனித உரிமைகள், சமுதாய ஏற்ற தாழ்வுகள், தனிமனித அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற விஷயங்களை மையப்படுத்திய படங்களை தருபவர். அந்த வகையில் அவரது படைப்புகளான படங்கள் வெற்றி பெற்றாலும், கடுமையான விமர்சனங்களை சந்திக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

இதற்கிடையே நேற்று கோவையில் தங்கலான் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் என்ற முறையில் பா ரஞ்சித் அதில் கலந்துக்கொள்வதாக இருந்தது. ஆனால் தங்கலான் பிரமோசன் நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. இது கோவையில் அவரது வருகையை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யபட்டார். அதை கண்டித்து நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆம்ஸ்ட்ராங்க் மனைவி உள்ளிட்ட கட்சியினர், இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் தீனா உள்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் தீனா உள்ளிட்ட கட்சியினர் 1500 பேர் மீது அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சற்று முன்