- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசி நேரத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? - கோர்ட்...

கடைசி நேரத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? – கோர்ட் அதிரடி உத்தரவால் கலங்கிப் போன படக்குழு

- Advertisement -

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் தங்கலான். இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்களை கொண்டு தங்கலான் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக வாழ்ந்த மக்கள், கோலார் தங்க வயலில் கொத்தடிமையாக பணிசெய்ததும், அப்பேஆது நடந்த விஷயங்களை மையப்படுத்தியும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சியான் விக்ரம் நாயகனாகவும் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் ஜனரஞ்சக படமாக மட்டும் இல்லாமல், பல விருதுகளை பெறும் விதமாக ஒரு கலைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பிறகு சியான் விக்ரம், தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

தங்கலான் படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கடந்த வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை, மதுரை என பல நகரங்களில் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், தங்கலான் படத்துக்கு ஒரு புதிய பிரச்னை உருவாகி உள்ளது. அதாவது அர்ஜூன்தாஸ் சுந்தர்லால் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக ரூ. 1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என தங்கலான் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதே போல் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தையும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. எனவே கங்குவா படம் வெளியிடும் முன்பும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்