- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் இடையே இப்படி ஒரு பஞ்சாயத்தா? - கோட் படம் விவகாரம்...

நடிகர் விஜய், சன் பிக்சர்ஸ் இடையே இப்படி ஒரு பஞ்சாயத்தா? – கோட் படம் விவகாரம் லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ், சினேகா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன், கனிகா, சுதீப், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் கோட் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், வரும் 17ஆம் தேதி படக்குழு சென்னை திரும்புகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருப்பதால் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்ய வருவாரா, மாட்டாரா என்ற ஒரு கேள்வி இருந்த நிலையில், அவர் 17ஆம் தேதி சென்னை திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் நிச்சயமாக அவர் வரும் 19ம் தேதி சென்னையில் ஓட்டு போடுவார் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் ஓட்டுப் போட காரில் வருவாரா, சைக்கிளில் வருவாரா அல்லது இந்த முறை வித்யாசமாக நடந்து வருவாரா என்பது தெரியவில்லை. என்றாலும் நிச்சயமாக, நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் தலைவராக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவற மாட்டார்.

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் கோட் படத்தை தொடர்ந்து, தனது 69-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். நடிகர் விஜயே இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர் செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ் எஸ் லலித்குமார் ஆகியோர் பெயரில், நடிகர் விஜய் தனது 69வது படத்தை சொந்தமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம், விஜயின் 69 வது படத்தை தயாரிக்க தானாக முன் வந்துள்ளது. உங்கள் 69வது படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று நடிகர் விஜயிடம் சன் பிக்சர்ஸ் கேட்டுள்ளனர். ஆனால் விஜய் தரப்பில் இல்லை என்று மறுத்துள்ளனர். இதனால் கடுப்பான சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதிரடியாக கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை மறுத்திருக்கிறது.

அதாவது பல மாதங்களுக்கு முன்பே, சாட்டிலைட் உரிமத்துக்காக ரூ. 52 கோடிக்கு கோட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி விட்டு, இப்போது வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விஜய் 69 படத் தயாரிப்பு பஞ்சாயத்து தான் காரணமா அல்லது கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே செய்துக்கொண்ட ஒப்பந்தத்தில் ஏதேனும் பிரச்சனையா என்பது முழுமையாக இன்னும் தெரியவில்லை.

- Advertisement -

சற்று முன்