காந்தி வேஷம் போட்டு பல பேரை பார்த்திருக்கேன், ஆனா காந்தியே வேஷம் போட்டு பர்ஸ்ட் டைமா இப்பதான் பார்க்கறேன் இப்படி ஒரு வில்லங்கமான வசனத்துடன் வெளியான தி கோட் டிரெய்லர், தீயாக தளபதி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்த படத்தில் ஒரு விஜய்க்கு காந்தி என பெயர் வைத்துள்ளனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
விஜய் மனைவி சினேகா, தன் கணவர் விஜய் மீது சந்தேகப்படுகிறார் என்பது டாக்டர் கேரக்டரில் நடித்துள்ள லைலாவிடம் பேசுவதை வைத்து உறுதியாகிறது. இதில் வில்லனாக மைக் மோகன் நடித்திருக்கிறார். இதுவும் குண்டுவெடிப்பு சம்பவ கதைதான். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா படங்களில் இந்த குண்டு கதை ஓடும் எனத் தெரியவில்லை.
டீ ஏஜிங் செய்யப்பட்ட இளமையான விஜய் காட்டப்படும் காட்சிகளில், சிரிப்பு தான் வருகிறது. சின்ன பசங்களுக்கு மீசை, தாடி வரைவது போல் அவரது கம்பீரமான உருவத்தை வெங்கட்பிரபு தொழில்நுட்பம் என்ற பெயரில் காமெடி செய்திருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
மங்காத்தா படத்தில் அஜீத்குமார் பேசிய, இனிமே சத்தியமா குடிக்க கூடாது என்ற அதே வசனத்தை இந்த படத்தில் நடிகர் விஜயும் பேசுகிறார். மருதமலை மாமணியே முருகய்யா பாடலை, கில்லி படத்தில் பாடியது போல் இந்த படத்திலும் விஜய் பாடுகிறார். இன்னும் எத்தனை ரிபீட்டோ தெரியவில்லை.
ஒரு கதையில் விஜய் நடிக்காமல், விஜய்க்காக திணிக்கப்பட்ட ஒரு கதையை உருவாக்கி இருக்கின்றனர் என்பதை தி கோட் ட்ரெய்லர் அற்புதமாக வெளிப்படுத்துகிறது. குடும்பத்துடன் எவனாவது பாங்காங் போவானா என்று விஜயை பார்த்து பிரசாந்த் கேட்கிறார். தி கோட் வெளியான பிறகு குடும்பத்தோட எவனாச்சும் தி கோட் படத்துக்கு போவானா என்று கேட்காமல் இருந்தால் சரிதான்.
மொத்ததில், சில காட்சிகள் மிரட்டலாக இருந்தாலும் வெங்கட்பிரபு இந்த படத்திலும் அரைத்த மாவை அரைத்திருக்கிறார். வெறும் பில்டப் காட்சிகளை வைத்து ஒப்பேத்தி இருக்கிறார். விஜய் நல்ல நடிகர். ஒருவேளை தி கோட் படம் இன்னொரு லியோவாக அமைந்தால், அதற்கு காரணம் இயக்குனர் வெங்கட்பிரபுவாக இருப்பாரே தவிர, நிச்சயம் விஜயாக இருக்க வாய்ப்பில்லை என்று டிரெய்லர் பார்த்த விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
தி கோட் ட்ரெய்லர் பார்க்க இங்கே கிளிக் செய்யவும் – https://youtu.be/jxCRlebiebw





