- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்துக்கு சென்சார் வழங்கிய சான்று, படத்தின் நீளம் அவ்வளவு நேரமா? ரசிகர்கள் தாக்கு...

தி கோட் படத்துக்கு சென்சார் வழங்கிய சான்று, படத்தின் நீளம் அவ்வளவு நேரமா? ரசிகர்கள் தாக்கு பிடிப்பார்களா? – படத்தின் இறுதியில் வெங்கட்பிரபு தரப் போகும் செமையான ட்ரீட்

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை 3 பாடல்கள் வெளியான நிலையில், 17ம் தேதி மாலை டிரெய்லர் வெளியானது.

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் டிரெய்லர் வெளியான ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் 24 மணி நேரத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை தி கோட் டிரெய்லர் கடந்து புதிய சாதனை புரிந்தது. அத்துடன் 1.6 மில்லியன் பார்வையாளர்கள் லைக் போட்டுள்ள நிலையில், 2024ம் ஆண்டில் வெளிவந்த எந்த படத்தின் டிரெய்லருக்கும் இந்த வரவேற்பு இல்லை.

விஜய் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் 3 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த பணிகள் முடிவடைந்தது. இன்று தி கோட் படம் சென்சார் சான்றுக்காக சென்றது. தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்த நிலையில், படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பதால் படத்துக்கு யு/ஏ சான்று தரப்பட்டுள்ளது.

இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பெற்றோர்களுடன் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இந்த படத்தை பார்க்கலாம். மேலும் படத்தின் நீளம் 2மணி நேரம் 55 நிமிடங்கள் அதாவது மொத்தம் 175 நிமிடங்கள் திரையில் ஓடும்.

ஏறக்குறைய 3 மணி நேரத்துக்கு 5 நிமிடங்கள் குறைவாக திரையில் படம் ஓடும் என்பதால், ரசிகர்களால் அதிக நேரம் அமர்ந்து படம் பார்க்க முடியுமா என்றால் படத்தில் 80 சதவீதம் சண்டை காட்சிகள் என்பதால் நிச்சயம் படத்தின் நீளம் ரசிகர்களை பாதிக்காது என்று கூறப்படுகிறது. அதனால் படத்தின் காட்சிகள் அடுத்தடுத்து விறுவிறுப்பாக செல்வதால் ரசிகர்களுக்கு போர் அடிக்காது என்கின்றனர்.

மேலும் தி கோட் படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு, ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தர ஏற்பாடு செய்திருக்கிறார். அதாவது படத்தின் இறுதியில் 3.5 நிமிடங்கள் ஓடும் அளவுக்கு, தி கோட் படப்பிடிப்பின் போது விஜய் நடித்த அன்சீன்களை சுவாரசியமாக தொகுத்து வழங்கி இருக்கிறார். அரசியலுக்கு சென்ற விஜய்க்கு இது ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக அவர் செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்