- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்ரம் நடிப்பு எந்தளவுக்கு ரீச் ஆனது, இதுவரை தங்கலான் செய்த வசூல் நிலவரம், 9 நாட்களில்...

விக்ரம் நடிப்பு எந்தளவுக்கு ரீச் ஆனது, இதுவரை தங்கலான் செய்த வசூல் நிலவரம், 9 நாட்களில் எத்தனை கோடிகள் என்று தெரியுமா? – இது எதிர்பார்த்த வசூல்தானா?

- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில், கடந்த 15ம் தேதி வெளியான படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தங்கவயலில் பணிசெய்த கொத்தடிமை தொழிலாளர்கள் பற்றிய கதைக்களத்தில் தங்கலான் உருவாகி உள்ளது.

நடிகர் விக்ரம் படங்கள் என்றாலே, அதில் அவரது தனித்துவமான நடிப்பு வெளிப்படும். பல படங்களில் தனது சீரிய நடிப்பாற்றலால் படத்தை வேற லெவலில் ரசிகர்களிடம் கொண்டு சென்றவர் நடிகர் விக்ரம். குறிப்பாக அழுத்தமான கேரக்டராக இருந்தாலும், அதிரடியான ஆக்சன் படமாக இருந்தாலும் விக்ரம் அதில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்துவார்.

- Advertisement -

அதில் குறிப்பாக சேது, பிதாமகன், சாமி, தூள், தில், அந்நியன், ஐ, காசி, ராவணன் என பல படங்களில் விக்ரம் நடிப்பு தரமான சம்பவமாக இருந்திருக்கிறது. நடிகர் கமலுக்கு அடுத்தபடியாக நடிப்பில் கேரக்டரில் தனக்கான தனிமுத்திரை பதிப்பவராக விக்ரம் இருந்து வருகிறார்.

அதே போல் இயக்குனர் பா ரஞ்சித், ஒரு தனி கவனம் பெற்ற இயக்குனராக தனது படங்களை, படைப்புகளாக வெளிப்படுத்தி வருகிறார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என அவரது படங்கள் மக்களின் உரிமைகளை பேசும் படமாக இருக்கிறது. விமர்சன ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும் ஒரு இயக்குனராக அவர் ஜெயித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவான படம் தங்கலான், பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று துவக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு தரப்பு சுமாரான படம் என்றும், ஒரு தரப்பு பெரிய அளவில் ரசிக்க முடியவில்லை என்றும் கூறிய நிலையில் கலவையான விமர்சனம் காரணமாக, படம் எதிர்பார்த்த பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

கடந்த வியாழக்கிழமை, 15ம் தேதி தங்கலான் படம் ரிலீசான நிலையில் நேற்று வரை இந்த படம் 9 படங்களில் செய்த வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி 9 நாட்களில் உலகளவில் தங்கலான் படம் மொத்தம் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வசூலா என்றால் இல்லை என்றாலும், இதுமாதிரியான வித்யாசமான கதைக்களத்தில் உருவான படங்களுக்கு 65 கோடி ரூபாய்கள் 9 நாளில் வசூல் என்பதே பெரிய விஷயம்தான் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

- Advertisement -

சற்று முன்