- Advertisement -
Homeபொழுதுபோக்குகர்ணனில் இந்த காட்சியை வைத்தது தனுஷுக்கே தெரியாது... அது மட்டுமல்ல படம் பார்த்து விஜயும் இப்படி...

கர்ணனில் இந்த காட்சியை வைத்தது தனுஷுக்கே தெரியாது… அது மட்டுமல்ல படம் பார்த்து விஜயும் இப்படி ஒரு கேள்வியை கேட்டார்… நடந்ததை கூறிய மாரி செல்வராஜ்…

- Advertisement -

இயக்குனர் ராமிடம் உதவியாளராக இருந்தவர் மாரி செல்வராஜ். ராமின் முதல் திரைப்படம் ஆன கற்றது தமிழில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மாரி நடித்திருப்பார். தொடர்ந்து தங்க மீன்கள் தரமணி உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் பணி புரிந்தார். இப்படியான சூழலில் தான் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

 

பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கள் என்றே கூறலாம். அதற்கு முன்பு பேசாமல் இருந்த விஷயங்களையும், இங்கு நிலவும் சாதி சமூக கொடுமைகளையும் மிக அழுத்தமாக தனது திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தினார் மாரி செல்வராஜ்.

 

பரியேறும் பெருமாள் பேசாத விஷயங்களை பேசியதால் பலரிடத்திலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக மாரி செல்வராஜ் இயக்கிய படம் தான் கர்ணன். தனுஷ் கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

இருப்பினும் விமர்சன ரீதியாக அந்த திரைப்படம் பலரிடத்திலும் போய் சேரவில்லை. பேருந்து அரசியலை மையப்படுத்தி அதில் நிலவும் சாதிய கொடுமைகளை இந்த திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருந்தார் மாரி செல்வராஜ். ஆனால் அது பெரியதாக ஒட்டவில்லை என்று பலரும் விமர்சித்தனர்.

 

இருப்பினும் இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலை துளி அளவு கூட பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படியாக, கர்ணன் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு செல்ல மாமன்னன் வாழை என வெற்றி படங்களை கொடுத்து மிகப்பெரிய உச்சத்திற்கு சென்று இருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த சூழலில் தான் கர்ணன் திரைப்படம் குறித்த ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார்.

 

படத்தில் தனுஷின் தங்கை பாத்திரத்தை தெய்வத்துடன் ஒப்பிட்டு இருப்பார் மாரி செல்வராஜ். அதிலும் இடைவேளைக் காட்சியில், தனுஷ் பேருந்தை அடித்து நொறுக்கும் போது தூரத்தில் என்று அவரது தங்கை கதாபாத்திரம் இதனைப் பார்ப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த விஷயம் தனுஷுக்கே தெரியாதாம். படத்தைப் பார்த்த பிறகு தான் அவர் மாரி செல்வராஜிடம் இது குறித்து ஆச்சரியமாக கேட்டிருக்கிறார். இதேபோல், நடிகர் விஜய்யும் படத்தை பார்த்துவிட்டு அதில் உள்ள சிறுவர்கள் எப்படி நடித்தார்கள் என்று ஆச்சரியமாக மாரியிடம் கேட்டாராம். இந்த தகவலை இயக்குனரே தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்