- Advertisement -
Homeபொழுதுபோக்குநாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் வரிசையில் அடுத்ததாக கூலி திரைப்படத்தில் இணைந்தது யார் தெரியுமா... அடுத்தடுத்து அப்டேட்டுகளை...

நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் வரிசையில் அடுத்ததாக கூலி திரைப்படத்தில் இணைந்தது யார் தெரியுமா… அடுத்தடுத்து அப்டேட்டுகளை அள்ளி வீசி ஆச்சரியப்படுத்தும் லோகேஷ் கனகராஜ்…

- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் நடித்து முடித்து இருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே சூர்யா நடித்திருந்த கங்குவா திரைப்படம் அந்த தேதியில் தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இப்படியான சூழலில் வேட்டையன் திரைப்படம் வெளியாவதால், ரேசிலிருந்து பின்வாங்கியது கங்குவா திரைப்படம். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வேட்டையன் திரைப்படத்தில் காண டப்பிங் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினிகாந்த்.

 

அதனுடன் தனது அடுத்த திரைப்படமான கூலியிலும் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், ஹைதராபாத்தில் நடைபெற்றன. தற்போது படக்குழுவினர் விசாகப்பட்டினத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு துறைமுகம் சம்பந்தப்பட்ட இடங்களில் படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தங்கம் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதில் ரஜினிகாந்த்துக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அது எந்த அளவு உண்மை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் சூழலில் அனிருத் அதற்காக இசையமைத்து வருகிறார்.

 

இந்த திரைப்படத்தின் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறார். அதன்படி முதலில் மலையாள நடிகர் சௌபின் சபீர் கூலியில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அதில் குட்டன் கதாபாத்திரத்தில் நடித்த வரும் தான் இவர். சபீர் தயாள் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார்.

 

இதுபோக தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனா, சைமன் கதாபாத்திரத்திலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். காலேசா என்னும் கதாபாத்திரத்தில் அவர் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி தெலுங்கு கன்னடம் திரையுலகில் இருந்து முன்னணி கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அமீர்கான் இடம்பெறுவாரா என்பது இன்னும் சில நாள்களில் திறந்து விடும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

சற்று முன்