- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு பாலியல் தொல்லை தந்த நடிகர்கள்… பெண்களை பாதுகாக்க ரஜினிகாந்த் போன்றவர்கள் முன்வர வேண்டும் -...

எனக்கு பாலியல் தொல்லை தந்த நடிகர்கள்… பெண்களை பாதுகாக்க ரஜினிகாந்த் போன்றவர்கள் முன்வர வேண்டும் – சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் ஆவேசம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். நடிகவேள் எம்ஆர் ராதா மகள். ராதாரவியின் சகோதரி. நடிகர் சரத்குமாரின் மனைவி. சின்னத்திரை தயாரிப்பாளர் என பலமுகங்கள் கொண்டனர். சித்தி, அண்ணாமலை, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் நாட்டு மக்களை தன்வசப்படுத்தியவர்.

ராதிகாவை பொருத்தவரை ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தார். பிறகு அம்மா, அக்கா, அண்ணி போன்ற குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பிறகு ஹீரோக்களின் அம்மாவாகவும் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் நடத்தி வரும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில், பாஜக கூட்டணியில் கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் ராதிகா சரத்குமார்.

- Advertisement -

கேரளாவில் மலையாள சினிமாத்துறையில் நடிப்பு வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்களுக்கும், படங்களில் நடிக்க வாய்ப்பு தரும்போது புதுமுக நடிகைகளுக்கும் சில இயக்குனர்கள், நடிகர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்தது ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் தெளிவாக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், சர்ச்சையில் சிக்கிய மலையாள நடிகர் சங்கமாக அம்மா சங்கமும் கலைக்கப்பட்டு விட்டது.

இதற்கிடையே தமிழில் சீனியர் நடிகையான ராதிகா சரத்குமார் நேற்று அளித்த நேர்காணல் ஒன்றில், கேரளாவில் மலையாள பட ஷூட்டிங்கின் போது கேரவன் வேனில் ரகசிய கேமரா வைத்து, நடிகைகள் உடைமாற்றியதை சில நடிகர்கள் கூட்டமாக அமர்ந்து ரசித்து பார்த்து சிரித்ததாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தால் மேலும் இந்த விஷயம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இன்று நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில், கேரவன் விவகாரம் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு என்னை போனில் தொடர்பு கொண்டது. புகார் இல்லாததால் மேற்கொண்டு அவர்கள் விசாரணை செய்யவில்லை. நடந்த சம்பவம் குறித்து விளக்கம் மட்டுமே அளித்தேன்.

ஹேமா கமிட்டி குறித்து பெரிய நடிகர்கள் மவுனம் காக்க கூடாது. ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் குரல் கொடுத்தால்தான் எங்களை போன்ற பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். 1980களில் இருந்து நான் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல்கள் இருந்தன. எனினும் பாலியல் தொல்லை தந்த நடிகர்களின் பெயர்களை சொல்ல மாட்டேன். சொல்லவும் முடியாது. இதில் நிறைய பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை, என்று ராதிகா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்