- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது லியோ வியாபாரம் இவ்வளவா?.. ரிலீஸுக்கு முன்னரே மாஸ் காட்டும் தளபதி

என்னது லியோ வியாபாரம் இவ்வளவா?.. ரிலீஸுக்கு முன்னரே மாஸ் காட்டும் தளபதி

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயகத்தில் நடித்த பீஸ்ட் படத்தின் தோல்வி, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்த வாரிசு படத்துக்கு கிடைத்த கலவையான விமர்சனத்தால் விஜய் கொஞ்சம் அப்செட்தான். அதிலும் அஜித் நடித்த துணிவு படத்துடன் களமிறங்கி வாரிசு பின் தங்கிவிட்டதே என அவரது ரசிகர்களும் வருத்தமடைந்தனர்.

எனவே அடுத்த ஒரு பிரமாண்ட ஹிட் கொடுத்துவிட வேண்டும் என முடிவெடுத்த விஜய் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநரான லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைந்தார். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த மாஸ்டர் படம் மெகா ஹிட்டானது. அதனால் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் லியோ நிச்சயம் மாஸ்டரை தாண்டி வெற்றி பெறும் என தளபதி ரசிகர்கள் கருதுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும்விதமாகத்தன் படத்தின் அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸும் இருந்தது.

- Advertisement -

காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் அதன் பிறகு சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. விஜய்யும் விரைவில் டப்பிங் கொடுக்கவிருக்கிறார்.

இதற்கிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி படத்திலிருந்து நா ரெடிதான் என்ற சிங்கிளும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. பாடல் பெரும் வரவேற்பை பெற்றாலும் அதில் இருந்த போதை, வன்முறை வரிகளும், விஜய் வாயில் வைத்திருந்த சிகரெட்டும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனையடுத்து மது மற்றும் போதைக்கு எதிரான வாசகங்கள் அந்தப் பாட்டில் சேர்க்கப்பட்டன. சமீபத்தில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமம் 140 கோடி ரூபாய்க்கும், சேட்டிலைட் உரிமம் 90 கோடி ரூபாய்க்கும், ஆடியோ உரிமம் 16 கோடி ரூபாய்க்கும், ஆந்திரா/தெலங்கானா திரையரங்க உரிமம் 21 கோடி ரூபாய்க்கும், கேரளா மற்றும் கர்நாடக திரையரங்க உரிமம் முறையே 16, 15 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் 350 கோடி ரூபாயை இப்போதே படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். மேலும், நிச்சயம் லியோ பல சாதனைகளை உடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்