- Advertisement -
Homeபொழுதுபோக்குஹிந்தியில் மாபெரும் நட்சத்திரத்தையும், தமிழ் திரையுலகில் முக்கிய நடிகரையும் ஒருசேர இயக்கும் அட்லி... பிரம்மாண்ட கூட்டணி...

ஹிந்தியில் மாபெரும் நட்சத்திரத்தையும், தமிழ் திரையுலகில் முக்கிய நடிகரையும் ஒருசேர இயக்கும் அட்லி… பிரம்மாண்ட கூட்டணி இணைவது எப்போது…

- Advertisement -

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, விஜய்யை வைத்து தெறி மெர்சல் மற்றும் பிகில் என மூன்று வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். அடுத்ததாக அவர் பாலிவுட் திரை உலகத்திற்கு சென்றார். ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றிய அவர் ஜவான் திரைப்படத்தை கொடுத்தார்.

 

- Advertisement -

தீபிகா படுகோன், நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. ஆனால் தமிழில் இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் அட்லியின் காப்பி அடிக்கும் திரைக்கதை தான்.

 

- Advertisement -

தமிழுக்கு இது அதர பழசு என்றாலும், ஹிந்தி சினிமாவில் அது பார்ப்பவர்களுக்கு புதிதாக தெரிந்ததால் ஜவான் திரைப்படம் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழில் சுதாரித்துக் கொண்ட ரசிகர்கள், படத்தை தூக்கி எறிந்தனர். எத்தனை திரைப்படங்களின் காட்சிகளை அவர் வைத்திருப்பார் என்றும் ஆதங்கப்பட்டனர்.

 

ஜவான் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, இதற்கு முன்பு அவர் இயக்கிய நான்கு திரைப்படங்களுக்கும் இதே விமர்சனம் தான் எழுந்து வருகிறது. பிற படங்களை காப்பியடிக்கும் அட்லி, அதில் திரைக்கதையை மட்டும் நேர்த்தியாக செய்து விடுவதால் இப்போது வரை தப்பித்து வருகிறார். விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டால் அது தன்னுடைய கதை என்றும் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.

 

இருப்பினும் இந்த முறை அவருக்கு ஜவான் திரைப்படம் தமிழில் கை கொடுக்க வில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும், பாலிவுட் திரையுலகில் அவர் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தனது அடுத்த திரைப்படத்திற்காக அவர் அல்லு அர்ஜுனுடன் இணைய இருந்தார். ஆனால் கதையை சற்று மாற்ற அல்லு அர்ஜுன் கூறியதாகவும், இதற்கு மனமில்லாமல் அட்லி விலகியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தற்போது இந்தி ஸ்டார் சல்மான் கானிடம் அட்லீ கதை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு முக்கிய வேடம் என்றும் தெரிகிறது. இருவரும் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படும் நிலையில், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கான் தற்போது ஏ ஆர் முருகதாஸ் படமான சிக்கந்தரில் கவனம் செலுத்தி வருகிறார். கமல்ஹாசனும் தனக்கான வேலைகளை முடித்துவிட்டு அட்லி படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்