- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் காட்சியின்போது அந்த வசனத்தை நான் யோசிக்கவில்லை... அதில் டெலிட் செய்யப்பட்ட இன்னொரு...

கோட் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் காட்சியின்போது அந்த வசனத்தை நான் யோசிக்கவில்லை… அதில் டெலிட் செய்யப்பட்ட இன்னொரு காட்சியும் உள்ளது… விவரங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு…

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜயின் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் இது திரையிடப்பட்ட நிலையில், ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

 

டிஏஜிங் முறையில் காண்பிக்கப்பட்ட மகன் விஜயின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், வில்லத்தனத்தில் அவர் மிரட்டி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியான கடைசி முப்பது நிமிடங்கள் விறுவிறுப்பாக அமைந்திருப்பதால் படம் வசூலை குவித்து வருகிறது.

 

முதல் நாளில் மட்டும் 126 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. வரும் நாட்களிலும் படம் பெரியளவு வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வரும் விஜயகாந்தின் கேமியோ ரோல் பலரையும் கவர்ந்துள்ளது. இதேபோல் திரிஷா மட்ட பாடலுக்கு ஆடி பட்டையை கிளப்பி இருக்கிறார்.

 

சிவகார்த்திகேயனும் கிளைமாக்ஸ் காட்சியில் வருவது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய இருப்பதால், திரையரங்கிற்கு பலரும் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசிய வசனத்தை தான் எழுதவில்லை என்று வெங்கட் பிரபு கூறி இருக்கிறார்.

 

அந்தக் காட்சியில், துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் விஜய் கொடுத்து விட்டு செல்வார். அதற்கு சிவகார்த்திகேயன் நீங்கள் போங்க சார் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார். இது நிஜ வாழ்க்கையிலும் பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் அந்த துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனத்தை அவர்தான் யோசித்ததாக வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.

 

இதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில், மைக் மோகன் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே ஒரு உரையாடல் இருக்கும் என்றும், படத்தின் நீளம் காரணமாக அதை எடுத்து விட்டதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். நீக்கப்பட்ட காட்சியை விரைவில் வெளியிடுவேன் என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்