- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டுல மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்புதான்… அங்கு...

தமிழ்நாட்டுல மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கூட தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்புதான்… அங்கு 3 நாட்களில் தி கோட் படம் வசூல் இத்தனை கோடிகளா? – தலையே சுத்துதே…

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இதுவரை அவரது நடிப்பில் வெளியான 68 படங்களில் 30க்கும் மேற்பட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணமாக பிகில், வாரிசு, லியோ, தி கோட், மெர்சல், சர்கார், மாஸ்டர், பீஸ்ட் போன்ற படங்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன.

ரஜினி, கமல், அஜீத்குமார் நடித்த படங்கள் கூட இப்படி 8 படங்கள் என்ற எண்ணிக்கையில் இதுவரை ரூ. 200 கோடி வசூலை கடந்தது இல்லை. இதற்கு வாரிசு, லியோ, பீஸ்ட் போன்ற படங்கள் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற படங்களாகும். ஆனாலும் அந்த படங்கள் கூட ரூ. 200 கோடி வசூலை மிக எளிதாக கடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி விஜய் நடிக்கும் படங்கள் மட்டுமே, கதை சொதப்பினாலும் படம் சுமாராக இருப்பதாக விமர்சனம் எழுந்தாலும் அதை எல்லாம் கடந்து படம் ஜெயித்து விடுகிறது. குறிப்பாக வசூலில் பல நூறு கோடி ரூபாய்களை கடந்து விடுகிறது. கடந்தாண்டு வெளியான லியோ, கடும் விமர்சனத்தில் சிக்கிய போதும் உலகளவில் ரூ. 650 கோடி என்ற அளவில் வசூல் சாதனை புரிந்தது.

அதனால் நடிகர் விஜய் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சக்ரவர்த்தியாக உயர்ந்த நிலையில் இருக்கிறார். விஜய் அரசியல் களத்தில் தற்போது குதித்திருக்கிறார். அதனால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டு 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளார், முதல்வர் பதவியை குறி வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில் நடிகர் விஜய் சினிமாவை உதறிவிட்டு செல்வதால் ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் சினிமா வியாபாரம் அவரால் பெரிய அளவில் பாதிக்கப்படும். அவர் படங்களில் நடித்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். அதை இழக்கவேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விஜய்க்கு பெரிய வரவேற்பு இருப்பது மீண்டும் தற்போது உறுதியாகி உள்ளது. கடந்த 5ம் தேதி தி கோட் ரிலீஸான நிலையில், 3 நாட்களில் தி கோட் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 215 கோடி வசூலித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ரூ. 97 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்