- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய பட்ஜெட்டில் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ள காந்தாரா 2, பெங்களூருவில் இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங்...

பெரிய பட்ஜெட்டில் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ள காந்தாரா 2, பெங்களூருவில் இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா? – நினைத்ததை சாதிப்பாரா ரிஷப் ஷெட்டி?

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தில் ஹீரோ கேரக்டரில் நடித்த ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி நடித்திருந்தார். காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல நூறு கோடி ரூபாய் வசூலில் சாதனை படைத்தது.

முதலில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காந்தாரா படம் தொடர்ந்து இந்தி, தெலுங்கு தமிழ் என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பிள மொழி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்துக்கு அபரிமிதமான ஒரு வரவேற்பு கிடைத்தது. இதனால் குறைந்தபட்ச பட்ஜெட்டில் உருவான இந்த படம் பல நூறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியது.

- Advertisement -

குறிப்பாக இந்த படத்தின் இறுதிக் காட்சியில் ரிஷப் ஷெட்டியின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது ரிசப் ஷெட்டிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலச்சுவான்தாரர் ஒருவர், தெய்வபூமியாக தந்த நிலத்தை அபகரிப்பதுதான் படத்தின் மையக்கதை.

காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக காந்தாரா 2ம் பாகம் கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதுவரை இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், இப்போது 3ம் கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகிறது. அங்கு அரண்மனை போன்ற மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு ராஜா காலத்து காட்சிகள் அங்கு படம் பிடிக்கப்பட்டு வருகின்றன. அங்கு இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இன்னும் ஒரே ஒரு செட்யூல் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. அத்துடன் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்க இருக்கின்றன. காந்தாரா 2 படம் குறித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காந்தாரா 2 படம் வெளிவரும் பட்சத்தில் காந்தாரா படத்தை விட காந்தாரா 2 படம் மிகப்பெரிய வெற்றியையும் பல நூறு கோடி ரூபாய் வசூலையும் அள்ளும் என்பது சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் கொஞ்சம் சொதப்பினாலும் இந்தியன் 2 படமாக காந்தாரா 2 மாறுவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்