- Advertisement -
Homeபொழுதுபோக்கு13 நாட்களில் தி கோட் படம் வசூலித்தது எவ்வளவு? ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ...

13 நாட்களில் தி கோட் படம் வசூலித்தது எவ்வளவு? ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு – ஆனா சொன்னதுல பாதி கூட வரலையே?

- Advertisement -

கடந்தாண்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ படம், விஜய் நடிப்பில் ரூ. 600 கோடி வரை உலகளவில் வசூல் சாதனை புரிந்ததாக கூறப்பட்டது. ஆனால் லியோ படத்தில் வந்த நரபலி, இரட்டை பிறவி போன்ற விஷயங்களால் மிகவும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றியை கொடுத்தது.

அதேபோல் இந்த ஆண்டில் தற்போது செப்டம்பர் 5ம் தேதி ரசிகர்களின் பலத்த ஆரவாரம், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா – மகன் என்ற இரண்டு வேடங்களில் விஜய் நடித்தது பெரிய அளவில் ரசிகர்களால் பாராட்டை பெற்றது.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த் பிரபுதேவா அஜ்மல் ஜெயராம், மைக் மோகன் யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் என பலர் நடித்திருந்தனர். இதில் மகன் கேரக்டரில் நடித்த விஜய் வில்லன் நடிப்பில் வேற லெவலில் அசத்தியிருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே மகன் விஜயின் அந்த வில்லத்தனமான நடிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தி கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்றாலும் பாடல்கள் அந்த அளவுக்கு பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. படம் ரிலீசான முதல் நாளில் தமிழ்நாட்டில் 38.3 கோடி ரூபாயும் உலக அளவில் 126 கோடி ரூபாயும் வசூலித்திருந்தது. ஆனால் இந்த படம் வெளியானால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைக்கும் என்று படக்குழு கூறியது.

- Advertisement -

படம் ரிலீஸ் ஆன பிறகு அடுத்து வரும் நாட்களில் தி கோட் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினமும் சராசரியாக ரூ. 30 கோடிகள் என்ற அளவில் மட்டுமே படத்தின் வசூல் நிலவரம் இருந்து வந்தது. தி கோட் படம் வெளியான 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை 13 நாட்களில் உலகம் முழுவதும் வசூலித்தது எவ்வளவு என படத்தை தயாரித்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி 5ம் தேதி முதல் நேற்று (17ம் தேதி) வரை தி கோட் படத்தின் உலகம் முழுவதும் மொத்த வசூல் நிலவரம் 413 கோடி ரூபாய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த படம் வெளியாகி 13 நாட்கள் ஆகியும் 500 கோடி ரூபாயை கூட எட்டவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்