- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வன்மத்தை கக்கற வேலை எல்லாம் இங்க வேணாம், பிக்பாஸ் போட்டியாளரை எச்சரித்த நடிகர் விஜய்...

இந்த வன்மத்தை கக்கற வேலை எல்லாம் இங்க வேணாம், பிக்பாஸ் போட்டியாளரை எச்சரித்த நடிகர் விஜய் சேதுபதி – அதிரடி ஆட்டத்தில் கலக்கும் மக்கள் செல்வன்!

- Advertisement -

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டயலாக் உடன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுப்பாளராக நடத்திக் கொண்டிருக்கிறார் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் செயல்பட்ட நிலையில், விஜய் சேதுபதியின் அந்த இடத்தில் கமல் அளவுக்கு தன்னுடைய பணியை சிறப்பாக செய்வாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, பிக்பாஸ் சீசன் 8 துவக்க நாள் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்த போதே நடிகர் ரஞ்சித்தை விஜய் சேதுபதி வச்சு செஞ்ச சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிலும் ரஞ்சித்தின் நண்பராக வந்த ஒருவர், சாப்டீங்களா, இப்படி எங்க ஊர்ல கேட்போம் என்று சொல்ல, எங்க ஊர்ல மட்டும் என்ன ஏன் வந்தீங்க என்றா கேட்போம், வீட்டுக்கு வந்தா அப்படியே திரும்பி போயிடுங்க என்றா சொல்லுவோம் என்று எதிர் கேள்வி கேட்டு அவரை பயங்கரமாக கலாய்த்தார் நடிகர் விஜய் சேதுபதி.

- Advertisement -

அதேபோல் ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, நீங்கள் இயக்கிய பீஷ்மர் படம் நன்றாக இருந்தது. கவுண்டம்பாளையம் படத்தை சொல்லவில்லை என்றும், சிந்துநதிப் பூ, பொன் விலங்கு படங்களை பார்த்தபோது உங்கள் மீது ஏற்பட்ட அந்த நண்பர் என்ற அபிப்ராயம் சமீபத்தில் கவுண்டம்பாளையம் படம் குறித்து நீங்கள் பேசிய போது இல்லையே என்றும் நேரடியாக தாக்கியது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதேபோல் முதல் 2 வாரங்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், முதல் வார இறுதியில் பேட்மேன் ரவீந்தர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 2வது வாரத்தில் நேற்று போட்டியாளர் அர்னவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியே வந்த அர்னவ், விஜய் சேதுபதியிடம் இருந்து வீட்டில் உள்ளவர்களை ஸ்கிரீன் வழியாக பார்த்து பேசினார்.

- Advertisement -

அப்போது அர்னவ் வீட்டுக்குள் இருந்தவர்களை பார்த்து, சகட்டுமேனிக்கு ஒரு கட்டத்தில் அவர் திட்ட ஆரம்பித்தார். உங்க கூட சேரவில்லை என்பதற்காக குரூப்பிஷம் செய்து கொண்டு என்னை வெளியேற்றி விட்டீர்கள் என்று விமர்சிக்க ஆரம்பித்தார். அவரது பேச்சு ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்றது. அப்போது அர்னவை குறுக்கிட்ட தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி, இந்த காழ்ப்புணர்ச்சியை கக்கற வேலையெல்லாம் இங்க வேண்டாம். இது அதற்கான மேடையோ இடமோ அல்ல.

வீட்டுக்குள் இருந்த போதே உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் தரப்பட்டது. அப்போது உங்க மனசில் உள்ள விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக பேசியிருக்கலாம். இது என்னோட ஹவுஸ்மேட்ஸ். அவர்களை நீங்கள் தாறுமாறாக பேசுவது நாகரீகமாக இருக்காது. நீங்கள் அவர்களை தரக்குறைவாக பேசுவதால், உங்கள் மீதுதான் அபிப்ராயமும் தரக்குறைவை ஏற்படுத்தும் என்று சொல்லி அவரை வெளியே அனுப்பி வைத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்