- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 துவங்குது; வீட்டுக்குள்ள வரப்போகும் போட்டியாளர்கள் யார்...

வரும் அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 துவங்குது; வீட்டுக்குள்ள வரப்போகும் போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா? – லிஸ்ட் வந்தாச்சு!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை கடந்த ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசன் ஏழு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் 100 நாட்களுக்கு மேல் தங்கி டாஸ்க்குகளில் ஜெயித்து பார்வையாளர்களின் அதிக ஓட்டுக்களை பெறும் போட்டியாளர் வெற்றி பெற்றவராக டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுகிறார்.

அந்த வகையில் அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு தொகை, டைட்டில் வின்னர் கேடயமும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடப்பட்டது. இந்த ஆண்டில் வரும் அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்குகிறது.

- Advertisement -

இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். நடிகர் கமல்ஹாசன். தனக்கு இருக்கும் முக்கிய படங்கள், அதன் படப்பிடிப்புகள் காரணமாக இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணியாற்ற முடியாது என்று அறிவித்த நிலையில், அவருக்கு மாற்றாக நடிகர் விஜய் சேதுபதி இந்த முறை பிக்பாஸ் களத்தில் தொகுப்பாளராக இறங்குகிறார். சமீபத்தில் அவரது பிரமோ வீடியோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைபெற்றது.

இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வரப் போகிறவர்கள் யார் யார் என்பது குறித்த ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இருப்பவர்கள் தான் பெரும்பாலும் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

போட்டியாளர்கள் விவரம்; விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து வரும் குரேஷி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத், காமெடி நடிகர் செந்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷாலினி சோயா, வில்லன் நடிகர் ரியாஸ்கான், கவர்ச்சி நடிகை பூணம் பஜ்வா, காமெடி நடிகர் ஜெகன், நடிகர் ரஞ்சித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் ஆன்லைன் மூலம் பிரபலமான அமலா சாஷி, நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், பைக் ரைடர் டிடிஎஃப் வாசன், விஜய் டிவி முன்னாள் தொகுப்பாளர் ஜாக்குலின், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதா, சீரியல் நடிகர் வினோத் பாபு ஆகிய17 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக முதல்கட்ட உத்தேச தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்