- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடகர் மனோ நடிகர் ரஜினிக்காக இந்த வேலை எல்லாம் பார்க்கிறாரா? அட இத்தனை நாள்...

பாடகர் மனோ நடிகர் ரஜினிக்காக இந்த வேலை எல்லாம் பார்க்கிறாரா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே? – ஆச்சரியத்தில் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் டிஎம் சௌந்தரராஜன், எஸ்பி பாலசுப்ரமணியம், கேஜே ஜேசுதாஸ் வரிசையில் மிகப் பிரபலமான பாடகர்களில் ஒருவராக இருப்பவர் பாடகர் மனோ. கடந்த 1980, 90களில் பாடகர் மனோ பாடிய பல பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர் பாடிய பல பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

குறிப்பாக வா வா வா கண்ணா வா, மதுரை மரிக்கொழுந்து வாசம், அதோ மேக ஊர்வலம், வேலை இல்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான், தில்லுபரிஜானே தில்லு தீவானே, செண்பகமே செண்பகமே, தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

- Advertisement -

இப்போதும் நடிகர் மனோ, பல படங்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இது தவிர இளையராஜா இசைக்கச்சேரிகளில் தொடர்ந்து பங்கேற்று பாடி வருகிறார். அது மட்டுமின்றி டிவி சேனல்களில் இசை கச்சேரிகளில் நடுவராகவும் பாடகர் மனோ பங்கேற்று வருகிறார். மனோ சித்ரா, மனோ எஸ் ஜானகி பாடிய பலநூறு பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக எப்போதும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற பாடல்களாக இருந்து வருகின்றன.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் பாடகர் மனோ பாடியிருக்கிறார். அது மட்டும் இன்றி சிங்காரவேலன் போன்ற சில படங்களிலும் பாடகர் மனோ நடித்திருக்கிறார். இந்த படத்தில் பாடகர் மனோ, கமல்ஹாசனின் நண்பராக நடித்திருப்பார். கவுண்டமணி, சார்லி, வடிவேலு ஆகியோரும் அதில் நடித்திருந்தனர்.

- Advertisement -

தமிழில் இருந்து தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார் பாடகர் மனோ. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள், தெலுங்கில் வெளியாகும் போது ரஜினி குரலில் ஒலிப்பது பாடகர் மனோ குரல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. முத்து படத்தில் இருந்து கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் வரை, ரஜினிக்கு டப்பிங் குரல் தந்து வருகிறார் பாடகர் மனோ.

தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ரஜினிக்கு பின்னணி குரல் கொடுத்தது கொடுத்து வருவது பாடகர் மனோ தான் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் வெளியாகும் வேட்டையன் படத்துக்கு ரஜினிக்கு இந்த முறையும் பின்னணி குரல் கொடுத்திருப்பது நடிகர் மனோதான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்