நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த படம் இதுவரை 340 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. கருப்பு படம் குறித்து பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களே இல்லாததே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஓடிடியில் படம் பார்த்தவர்களில் பலரும் கருப்பு படம் குறித்து சில முக்கியமான எதிர்மறை விமர்சனங்களை வைத்திருக்கின்றனர். இந்த படத்தின் உண்மையான நாயகன் வில்லனாக நடித்த ஆர்ஜே பாலாஜி தான். சூர்யா வரும் காட்சிகள் 30 நிமிடங்கள் கூட இல்லை. அதிலும் கருப்பசாமியாக அவரை பில்டப் செய்யவே நேரம் போய்விட்டது.
மேலும் இது ஒன்றும் வித்யாசமான கதையோ விறுவிறுப்பான படமோ கிடையாது. காந்தாரா படத்தை காப்பியடித்து 1980களில் எடுக்கப்பட்ட படம் போல பூமர் காட்சிகள் திரைக்கதை கொண்ட ஒரு படம்தான். இந்த படத்தை ஓரளவுக்கு ஒப்பேத்தி சென்றது மலையாள நடிகர் இந்திரன்ஸ், அவரது மகளாக வரும் அனகா மாயா ரவி கேரக்டர்கள்தான்.
படம் முழுக்க பல இடங்களில் சொதப்பல்களும் லாஜிக் மிஸ்டேக்குகளும் நிறைந்து இருக்கின்றன. ஆர்ஜே பாலாஜி பல இடங்களில் தன்னை மட்டுமே மிகைப்படுத்தி காட்சிகளை தந்துள்ளார். மற்றபடி சூர்யாவை டம்மியாக்கி வேடிக்கை காட்டியிருக்கிறார். இந்த படத்தில் திரிஷாவின் பங்களிப்பு என்னவென்றே யாருக்கும் தெரியாது. மேலும் கேமியோ ரோலில் நடித்த ஆர்யாவின் போர்ஷனே அப்படியே நீக்கப்பட்டுள்ளது.
சூர்யா, ஆர்யா இருவருக்குமே பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதில் ஆர்ஜே பாலாஜி தெளிவாக இருந்திருக்கிறார். இந்த படம் ஜெயிப்பதற்கு ஒரே காரணம் இது கடவுளை மையப்படுத்திய ஒரு கதைக்களத்தில் உருவான படம் என்பதுதான். மற்றபடி இயக்குனராக ஹீரோவாக வில்லனாக யாருமே இந்த படத்தில் ஜொலிக்கவில்லை என்பதுதான் உண்மை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்தும் ஆர்ஜே பாலாஜிக்கு அடுத்த படம் தயாரிக்க இன்னும் எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை. ஏனென்றால் அவர் கருப்பு படம் இயக்கத்தில் நடந்துக்கொண்ட பல விஷயங்கள் இன்டஸ்ட்ரிக்கு தெரியும். கடைசி நேரத்தில் 40 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டில் தண்டச் செலவு வைத்து, பைனான்ஸ் சிக்கலை ஏற்படுத்தியதே அவர்தான். அதனால் ஆர்ஜே பாலாஜியை யாருமே அணுகவில்லை என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





