- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தில் சூர்யாவுக்கு இத்தனை வில்லனா? பாலிவுட் வரை சென்றிருக்கிறார்களே

கங்குவா படத்தில் சூர்யாவுக்கு இத்தனை வில்லனா? பாலிவுட் வரை சென்றிருக்கிறார்களே

- Advertisement -

தமிழ் ரசிகர்களுக்காக மட்டுமின்றி பான் இந்தியா படமாக உருவாகிக் கொண்டிருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களுக்கு பலவித எதிர்பார்ப்புகளை தூண்டி உள்ளது. விக்ரம் 2 படத்தில் ரோலக்ஸ் சாராக மிரட்டிய சூர்யா அவர்களின் அடுத்த படமாக மிரட்ட வருகிறது கங்குவா.

3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் தியேட்டரில் பார்க்கும்பொழுது ரசிகர்களின் கண்ணுக்கு மிகப்பெரும் விருந்தளிக்கும் வகையில் அமையும் என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

மேலும் பத்து மொழிகளில் தயாராகி வரும் கங்குவார் திரைப்படம் 20% வரலாற்றையும் 80% கற்பனையையும் கொண்டதாம். கங்குவா என்றால் என்ன என்று பலரும் தங்களுக்கு வாய்க்கு வந்தபடி பல அர்த்தத்தை கூறி வந்தனர். ஆனால் கங்கு என்றால் நெருப்பு நெருப்பால் ஆனவன் தான் கங்கு வா என்பதை பட குழு நேற்று அறிவித்தது.

ரோலக்ஸ் சாரின் அடுத்த பரிணாமத்தை அதுவும் 3d இல் காண ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள். மேலும் கூடுதல் செய்தியாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிகர் சூர்யாவிற்கு வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

இது மேலும் படத்தின் சுவாரசியத்தை கூட்டி உள்ளது என்றால் அது மிகையில்லை. பாபி தியோலும் நடிகர் சூர்யாவும் இணைந்து தெறிக்க விட இருக்கும் காட்சிகள் அடுத்த மாதம் பேங்காக்கில் படமாக்கப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹிந்தியில் படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காக தற்போது வில்லன்களை பாலிவுட்டில் இருந்து வரவழைக்கும் கலாச்சாரமும் தமிழ் சினிமாவில் பரவி வருகிறது. ஏற்கனவே லியோ படத்தில் சஞ்சய் தத்தை வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு பாலிவுட் நடிகர்கள் இதற்காகவே அளவெடுத்து செய்தது போல் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். எனினும் உள்நாட்டு சுவையும் மிஸ் ஆகி விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் சிறுத்தை சிவா ஒரு முக்கிய நடிகரை வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளரும், சதுரங்க வேட்டை போன்ற படங்களில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்ற நடிகர் நட்டி இந்தப் படத்தில் சூர்யாவுக்கு முக்கிய வில்லனாக இருக்கப் போகிறார். இந்த நிலையில் மாலை 5 மணிக்கு சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு பட குழு சூர்யாவின் லுக்கை போஸ்டராக வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் ஹாலிவுட் படங்கள் ஹீரோ போல் சூர்யா மிரட்டும் தோனியின் இருவருகிறது.

சற்று முன்