- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அதுக்குள்ளேயும் கோட் படம் ஓடிடியில் வெளியாக போகுதா... ரிலீஸ் தேதியையும் அறிவிச்சாச்சு... சரி, வெங்கட்...

என்னது அதுக்குள்ளேயும் கோட் படம் ஓடிடியில் வெளியாக போகுதா… ரிலீஸ் தேதியையும் அறிவிச்சாச்சு… சரி, வெங்கட் பிரபு கூறிய விடுபட்ட காட்சிகள் இருக்குமா இருக்காதா…

- Advertisement -

இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படங்களில் ஒன்று, தளபதி விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம். ரசிகர்கள் இதனை சுருக்கி கோட் என்று அழைக்க, கடந்த மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது.

 

- Advertisement -

தந்தை மகன் என விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் இதில் நடித்திருந்தார். மகன் ஜீவன் கதாபாத்திரத்திற்காக முறையை வெங்கட் பிரபு பயன்படுத்தி இருந்தார். அது மிகச்சரியாகவும் வொர்க் அவுட் ஆனது என்றே கூறலாம். படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது.

 

- Advertisement -

அதேசமயம் படத்தின் மீதான எதிர்வினைகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. முதலில் ரசிகர்கள் கூறியது படத்தின் நீளம் தான். மூன்று மணி நேரம் ஓடும் இந்தக் கதையில் அந்த அளவு சுவாரசியமான காட்சிகள் இடம்பெறவில்லை என்று பலரும் இங்கு தெரிவித்தனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் தொடக்கத்தில் இருந்து ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்ததாகவும் பலர் இங்கு கருத்து வெளியிட்டனர்.

 

கிளைமாக்ஸ் காட்சியில் வெங்கட் பிரபு கொண்டு வந்த சில மொமன்ட்கள், குறிப்பாக சிவகார்த்திகேயன் வந்த காட்சி, மங்காத்தா இசை பயன்படுத்திய இடம் என்று குறிப்பிட்ட சில அம்சங்கள் நன்றாக இருந்ததால் திரையரங்கை விட்டு திரும்பும் ரசிகர்கள் ஓரளவு திருப்தியுடன் வெளியேறினர்.

 

ஒட்டுமொத்தமாக கூற வேண்டும் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கோட் திரைப்படம் அந்த அளவு பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படியான சூழலில் தான் அந்த திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வரும் மூன்றாம் தேதி இந்த திரைப்படம் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் கோட் வெளியாகிறது. இந்த நிலையில் படம் வெளியான பிறகு சில பேட்டிகளில் கூறியிருந்த வெங்கட் பிரபு, சில முக்கியமான காட்சிகளை நாங்கள் எடுத்து விட்டதாகவும் படத்தின் நீளம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அதை ஓடிடி தளத்தில் வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் அந்த காட்சிகள், இடம் பெற வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்