- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்புக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம், போட்டுத் தாக்கிய பிரபலம்...

நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்புக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம், போட்டுத் தாக்கிய பிரபலம் – என்னங்க, இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். 73 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் சுறுசுறுப்பாக நடித்து இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு ஒரு சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் சிறிய அடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்கு ஆஞ்சியோ செய்து சரி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது வயிற்றுப் பகுதியில் ஸ்டண்ட் வைத்து அறுவை சிகிச்சை நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இன்னும் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து ஓய்வு எடுத்த பின் அவர் பூரண குணமடைந்து வீட்டுக்கு நலமுடன் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் திடீர் உடல்நல பாதிப்பு குறித்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது, பொதுவாக நடிகர் ரஜினிகாந்த் போன்ற வயதில் மூத்த சீனியர் நடிகர்களை, இயக்குனர்கள் அதிகம் சிரமப்படுத்தாமல் தான் படம் எடுப்பார்கள். இயக்குனர் ஷங்கர் போன்றவர்கள் அதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்திலும் ரஜினியை மிகவும் சிரமப் படுத்தும் விதமாக காட்சிகளை நெல்சன் வைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் கூலி திரைப்படத்தின் காட்சிகள் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அந்த படத்தில் ரஜினி பங்கேற்ற சண்டைக் காட்சி இரவில், மழை கொட்டும் காட்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மழை நீர் ரஜினியை தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காக வெந்நீரை கொட்டி மழை பெய்வது போல் அந்த காட்சியை எடுத்து முடித்து இருக்கிறார்கள்.

அப்படி ஒரு காட்சியை எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது சாதாரண பகல் நேரத்தில் நடப்பது போன்ற ஒரு சண்டைக்காட்சியாக இருந்தால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்களா? மழையில்தான் அந்த சண்டைக்காட்சி வேண்டும் என்பது என்ன முக்கியத்துவம் இருந்து விடப் போகிறது. இதனால்தான் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் சரியில்லாமல் போயிருக்கிறது. இதையெல்லாம் யோசித்து ஒரு சீனியர் நடிகரை வயதில் மூத்தவரை படம் எடுக்கும் போது இயக்குனர்கள் மிகவும் கவனமாக அவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலைப்பேச்சு அந்தணன் பேசி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்