- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் அடிக்கடி ஏன் இப்படி பயணம் போகிறார் என்று தெரியுமா? அதுல இவ்வளவு விஷயங்கள்...

நடிகர் அஜீத்குமார் அடிக்கடி ஏன் இப்படி பயணம் போகிறார் என்று தெரியுமா? அதுல இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? சமீபத்தில் அஜீத்குமார் பேசிய வீடியோ வைரல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்கள் 4 பேரில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத் குமார். ரஜினி, கமல், விஜய், அஜீத் குமார் ஆகிய 4 பேரும்தான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொட்டிக் கொடுக்கிற முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் நடித்த படம், தோல்வி படமாக இருந்தாலும் கூட அவர்களுக்கு வசூல் ரீதியாக வெற்றியை, லாபத்தை தரக்கூடிய நடிகர்களாக இவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜீத்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்து விட்டார். இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. திரிஷாவும் அஜீத்குமாரும் பங்கேற்க உள்ள அந்த பாடல் காட்சி, மிக விரைவில் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அட்லி படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயின் நாட்டில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. 50 நாட்களுக்கு மேல் அங்கு குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை நடத்த பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல், நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் ஆகியவற்றில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இரண்டு உயர்ந்த ரகமான ஸ்போர்ட்ஸ் கார்களை அவர் வாங்கி இருக்கிறார். மேலும் ஐரோப்பாவில் நடக்க உள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் சில மாதங்களுக்கு முன் ஒரு நீண்ட பயணத்தை பைக்கில் மேற்கொண்டார். இந்த பயணத்தை அவரது நிறுவனமான வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனம் ஆவணப்படுத்தியது. அதிலிருந்து ஒரு வீடியோவை அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவரது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் அஜீத்குமார் ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அஜீத்குமார் கூறியிருப்பதாவது, பயணம் ஒரு ஆகச் சிறந்த விஷயம். பயணமே சிறந்த கல்வியாக அமைகிறது. மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை. பயணம் மேற்கொள்ளும் போது தான் பலவித அனுபவங்கள் கிடைக்கும். பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும், என்று நடிகர் அஜித்குமார் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ :https://x.com/PrakashMahadev/status/1842501765180035163

- Advertisement -

சற்று முன்