- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தின் இசை வௌியீட்டு விழா, எங்கே எப்போது என அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு -...

கங்குவா படத்தின் இசை வௌியீட்டு விழா, எங்கே எப்போது என அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு – சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் சரியாக ஓடவில்லை. குறிப்பாக காப்பான், அயலான், தானா சேர்ந்த கூட்டம், எதற்கும் துணிந்தவன், என்ஜிகே என அவர் பெரிதும் எதிர்பார்த்த இந்த படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தன. இதற்கிடையே ஜெய்பீம், சூரரைப் போற்று படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன.

அதே நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை முடித்த சூர்யா, அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்தார். ஆனால் ஷூட்டிங் துவங்கிய ஒரே மாதத்தில் இருவரும் கருத்து வேறுபாடும், அதனால் மனக்கசப்பு ஏற்பட்டதால் சூர்யா, வணங்கான் படத்தை விட்டு வெளியேறினார். பிறகு சூர்யா கேரக்டரில் அருண் விஜய் நடித்தார்.

- Advertisement -

அதே போல், சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. மதுரையில் படப்பிடிப்பு துவங்கி நடத்தப்பட்டது. ஆனால் இந்தி எதிர்ப்பு கதைக்களத்தில் நடிக்க சூர்யா தயங்கினார். மேலும் கதையிலும், திரைக்கதையிலும் மாற்றங்களும், திருத்தங்களும் செய்யுமாறு இயக்குனரை வற்புறுத்தினார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன சுதா கொங்கரா அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தின் கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். புறநானூறு என்பதற்கு பதிலாக படத்துக்கு வேறு பெயர் வைக்கப்பட உள்ளது. இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகவும் உள்ளது. இது சுதா கொங்கராவின் லட்சியப் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான கங்குவா படம், வருகிற 10ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்த நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படம் அன்று ரிலீஸாவதால், கங்குவா படம் வருகிற நவம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த படம் முதல் பாகமாக வெளிவரும் நிலையில், 2ம் பாகம் படப்பிடிப்பும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதற்கிடையே கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கங்குவா படக்குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வருகிற 20ம் தேதி, கங்குவா இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திஷா பதானி, பாபி தியோல் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல், இப்போது தளபதி 69 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.

- Advertisement -

சற்று முன்