- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் வாரமே நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் அதகளம் ஆரம்பம் - விளையாட்டு...

முதல் வாரமே நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் அதகளம் ஆரம்பம் – விளையாட்டு இப்பவே சூடு பிடிச்சிடுச்சே?

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி மாலை துவங்கியது. கடந்த 2017ம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளை கடந்து, இப்போது தொடர்ந்து 8வது ஆண்டாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த 7 ஆண்டுகளாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இந்த முறை விஜய் சேதுபதி வழங்குவது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

எனினும் கமல்ஹாசனை விட விஜய் சேதுபதி யதார்த்தமாக பேசுவதாக பார்வையாளர் மத்தியில் பாராட்டு எழுந்துள்ளது. கமல் பேச்சில் ஒரு தற்பெருமை இருக்கும். அது விஜய் சேதுபதியிடம் இல்லை என்றும் விமர்சிக்கின்றனர். வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்ற பிறகு இரண்டாவது வாரத்தில்தான் நாமினேஷன் என்பது இருக்கும்.

- Advertisement -

ஆனால் நேற்று முதல் நாளிலேயே 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று பிக்பாஸ் அதிரடியாக அறிவித்து நாமினேஷன் நடத்தப்பட்டது. இதில் அதிக ஓட்டு எண்ணிக்கையில் நாமினேஷன் செய்யப்பட்ட சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்கள் 18 பேரில், வயதில் குறைந்த சின்ன பெண்ணாக இருந்த சாச்சனாவை வீட்டுக்குள் வந்த 24 மணி நேரத்துக்குள் நாமினேஷன் செய்து அங்கிருந்த போட்டியாளர்களே வெளியேற்றியது பார்வையாளர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கூட போய் விடுகிறேன் என்று அவர் பேச்சுவாக்கில் சொன்னதையே சக போட்டியாளர்கள் காரணமாக சொல்லி வெளியேற்றியது, பலரையும் எரிச்சல்படுத்தியது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து, நேற்று முதல் நாளில் நாமினேஷன் பிராசஸ் நடந்தது அதில் இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டை வெளியேற்றப் போகும் போட்டியாளர் குறித்து வீட்டுக்குள் இருக்கும் 17 போட்டியாளர்கள் தங்களது ஓட்டுக்களை செலுத்துமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். அந்த வகையில் நேற்று, வீட்டுக்குள் உள்ள 17 போட்டியாளர்களில் 6 பேர் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.

நடிகர் ரஞ்சித், ராஜா ராணி சீரியல் நடிகர் அருண் பிரசாத், கோலமாவு கோகிலா பட நடிகை ஜாக்குலின், பேட்மேன் என அழைக்கப்படும் ரவீந்தர், தமிழ் பேச்சாளர் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இந்த நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர். பார்வையாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் முக்கிய போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே நாமினேஷனில் சிக்கியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்