கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குனராக தொடங்கிய அவரது பயணம், அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு என வெற்றிப்பாதைகளை அமைத்துக் கொடுத்தது.
இவரது இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட முகமூடி திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. ஜீவா கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில், இப்போது தெலுங்கு சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.
சூப்பர் ஹீரோ கான்செப்ட் என்பதால் இந்தத் திரைப்படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முந்தைய திரைப்படங்களிலும் மிஷ்கின், வெற்றியின் முகட்டில் இருந்ததால், படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், முகமூடி திரைப்படம் திரையரங்குகளில் சென்று பார்த்தவர்களை சோதித்தது.
2012 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் குறித்து தற்போது ஜீவா வாய் திறந்து இருக்கிறார். அதில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு இரண்டாம் பாதி இழுத்தடிப்பதாக கூறினேன். நான் அப்போது போன் செய்தும் கூட, மிஷ்கின் எடுக்கவில்லை.
எனது படைப்பை குறை சொல்கிறாயா என்று அவர் என் மேல் கோபம் கொண்டார். நானும் விட்டுவிட்டேன். இதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் நடித்தேன். அதிலும் இரண்டாம் பாதியில் ஒரு ஏழு நிமிடங்கள் வேண்டாம் என்று கூறினேன். டப்பிங் பணிகளின் போது கூட அந்த காட்சிகளை ஓட விட்டேன்.
ஆனால் அந்தக் காட்சியை இயக்குனர் எடுக்கவில்லை. கோ படத்தின் போது இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் நடித்த கோட்டா சீனிவாசராவ், ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவருக்கு தோன்றியதை செய்தார். சார் இதை வேண்டாம் என்று தெரிவித்தேன். உடனே அவர் சரி இதனை அடுத்த படத்தில் செய்கிறேன் என்று கூறிவிட்டார் என ஜீவா பேசி இருக்கிறார். தனக்கு தோல்வி அடைந்த திரைப்படங்கள் முகமூடி மற்றும் நீதானே என் பொன்வசந்தம் குறித்து ஜீவா பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





