இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வெளியானது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பஞ்சு சுப்பு, மைக் மோகன், ஜெயராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.
இந்த படத்தில் டிஏஜிங் செய்யப்பட்ட விஜய், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். குறிப்பாக இளையதளபதி விஜயின் வில்லன் நடிப்பு, வேற லெவலில் இருந்தது. படத்தின் வெற்றிக்கு அதுவே பெரிய காரணமாக அமைந்தது. இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஒரு காட்சியில் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அதே போல் கேமியோ ரோலில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த படத்தின் இறுதியில், விஜய் மகள் தல என அஜீத்குமார் பெயரை சொல்வதும், அதை விஜயே கேட்பதும் பெரிய அளவில் கரகோஷத்தை பெற்றது.
தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் மட்ட பாடல் காட்சியில் விஜயுடன் நடிகை திரிஷா குத்தாட்டம் போட்டிருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே இந்த பாடல்காட்சியில் வரும் திரிஷாவுக்கு பாடும் வாய்ப்பின்றி ஆடும் வாய்ப்பு மட்டுமே தரப்பட்டிருந்தது. ஆனால் கில்லி பட பாடல் அப்படி போடு போடு போடு போல பெரிய அளவில் டிரண்டிங் ஆகவில்லை.
ஆனால் முதல் இந்த பாடல் காட்சியில் குத்தாட்டம் போட இயக்குனர் வெங்கட் பிரபு அணுகிய தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீ லீலாவை தான். ஆனால் அவர் இன்னும் தமிழ் படத்தில் அறிமுகம் ஆகாததால் இந்த ஒரு பாடல் காட்சியில் நடனமாட வரவில்லை என்று மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. அதன் பிறகுதான், திரிஷா இந்த பாடலுக்கு கேமியோ ரோலில் வந்து ஆடினார். ஆனால் ஸ்ரீ லீலா தற்போது சிவகார்த்திகேயனுடன், சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
விஜயுடன் குத்தாட்டம் போட மறுத்த சிவகார்த்திகேயனுடன் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதே நேரத்தில் ஸ்ரீ லீலா நடனமாட வேண்டிய வாய்ப்பு எப்படி திரிஷாவுக்கு போனது என்பதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. தி கோட் படத்தில் விஜயுடன் மட்ட பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ. 2 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் ஸ்ரீ லீலா. தெறித்து ஓடி வந்த வெங்கட்பிரபு, திரிஷாவிடம் பேசி ரூ. 50 லட்சம் சம்பளம் தந்து அவரை ஆட வைத்திருக்கிறார். நண்பர் விஜய்க்காக அந்த சம்பளத்தில் நடனமாட திரிஷாவும் உடனே ஓகே சொல்லி இருக்கிறார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.





