- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது, எம் மகன் படத்துல எனக்கு அந்த சீன் பண்ண விருப்பமில்லை. காரணம் உண்மையாவே அது பப்ளிக் ரோடு. எனக்கு சுயமரியாதை இருக்குது முடியாதுன்னு சொல்லிட்டேன். நடுரோட்டுல படுத்து உளுருன்னு சொல்லும்போது ரொம்ப அவமானமா இருந்துச்சு. டைரக்டர் திருமுருகன் சார் ப்ளீஸ் மேடம் இது ரொம்ப நல்ல சீன். தயவு செய்து பண்ணுங்க என்று கெஞ்சினார். 12 மணி உச்சி வெயில்ல 100 பேர் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கறாங்க. ரொம்ப கடுப்பா இருந்துச்சு. டைரக்டர் கெஞ்சினாருன்னு அந்த சீன்ல நடிச்சேன். ஆனா நான் அந்த சீன் மட்டும் பண்ணாமல் இருந்திருந்தால் என்னோட சினிமா வாழ்க்கையில் அது பெரிய இழப்பா மாறி இருக்கும். அந்த உருளுகிற சீனுக்காக நான் தமிழ்நாடு ஸ்டேட் அவார்டு வாங்கினேன் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார்.





