- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் மோதலா?.. லியோ தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் மோதலா?.. லியோ தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

- Advertisement -

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் ட்ரெய்லர் வெளியீட்டை திருவிழா போல் அவர்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரம் நிறைவடைவதற்குள் யூட்யூபில் 30 மில்லியன் பார்வைகளை ட்ரெய்லர் கடந்திருக்கிறது. இதன் மூலம் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனை ரொம்பவே அசால்ட்டாக காலி செய்திருக்கிறது லியோ. இதன் காரணமாகவும் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் திளைத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ட்ரெய்லர் சாதனை ஒருபக்கம் இருக்க படத்தின் டிக்கெட்டுக்கான ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கியிருக்கிறது. அதன்படி சில நாடுகளில் ப்ரீ புக்கிங்கிலும்கூட ஜெயிலர் படத்தின் சாதனையை லியோ காலி செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இங்கு புக் மை ஷோவிலும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் பேர் லியோ டிக்கெட்டை பதிவு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே முதல் வாரம் முழுக்க ஹவுஸ்ஃபுல்தான் என்று கருதப்படுகிறது.

அதேபோல் மற்ற படங்களுக்கு என்ன விதியோ அதே விதிதான் லியோ படத்துக்கும். அதன்படி லியோவுக்கும் அதிகாலை காட்சி இல்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ரிலீஸுக்கு முதல் நாள் பெய்டு ப்ரீமியர் ஷோவுக்கு தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி லியோ ஏற்பாடுகள் ஜரூராக நடக்க சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜுக்கும், விஜய்க்கும் மோதல் என்ற தகவல் வெளியானது. மேலும் படத்தின் இறுதிக்கட்ட பணிகளை ரத்னகுமார் கவனித்தார் என்றும் சொல்லப்பட்டது.

- Advertisement -

ஆனால் லோகேஷ் தனது ட்விட்டர் பயோவில் லியோ படத்தின் பெயரை வைத்ததை அடுத்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் குமார் இதுகுறித்து பேசுகையில், லோகேஷ் கனகராஜுக்கும் விஜய்க்கும் மோதல் என்று வந்த தகவல் வடிக்கட்டிய பொய். அவர்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்பார்கள். லியோ படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கின்றன. அதேபோல் லியோ எல்சியூவில் வருமா வராதா என்பதை படம் பார்த்து நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

- Advertisement -

சற்று முன்