- Advertisement -
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம். அவரது மகன் ரவிகிருஷ்ணா 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் பெரிய அளவில் நடிகராக ஜெயிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் கூறியதாவது, நான் அப்போது பிஸியாக இருந்ததால் என் மகன் ரவி கிருஷ்ணாவின் வளர்ச்சியை சரியாக திட்டமிடவில்லை. ஆத்ம திருப்தி தராத பல படங்களை அவன் நடிக்காமல் தவிர்த்தான். அவனுடைய திறமைக்கு நான் இன்னும் சிறப்பான வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.





