- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக இறங்கி வேலை செய்யும் ஏ ஆர் ரஹ்மான்... உலகெங்கும் உள்ள ஏ...

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்காக இறங்கி வேலை செய்யும் ஏ ஆர் ரஹ்மான்… உலகெங்கும் உள்ள ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்…

- Advertisement -

இந்தியா மட்டுமல்ல உலகம் போற்றும் இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் ஏ ஆர் ரகுமான். தமிழ் மொழியைத் தாண்டி பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வெற்றி கொடியை நாட்டி இருக்கும் அவர், தனக்கென ரசிகர் பட்டாளத்தை உலகமெங்கும் வைத்திருக்கிறார்.

 

- Advertisement -

இப்படியான சூழலில்தான் அவர் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட பிரச்சார பாடல் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரை சூடு பிடித்துள்ளது.

 

- Advertisement -

இந்தத் தேர்தலில், முதலில் அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் தான் போட்டியிடுவதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. அப்போது ட்ரம்ப்பின் கேள்விகளால் பைடன் சற்று பின்வாங்கினார். தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கி இருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அவருக்கு, அமெரிக்க பசிபிக் தீவுகளின் வெற்றி அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும், டொனால்ட் ட்ரம்புக்கும் ஆதரவு பெருகி வருகிறது.

 

இப்படியான சூழலில் தான், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஒரு பிரச்சார பாடலை உருவாக்க, ஏ ஏ பி ஐ எனப்படும் அமெரிக்க பசிபிக் தீவுகளின் வெற்றி அமைப்பு ஏ ஆர் ரகுமானை நாடி இருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்டிருக்கும் ரகுமான், 30 நிமிட பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

 

இதில் ஏ ஆர் ரகுமானின் பாடல்களும், கமலா ஹாரிஸின் பிரச்சாரம், வாக்குறுதிகள் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 30 நிமிட பாடல், வரும் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான டீசர் ஒன்றும் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்