- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், அஜீத்குமார் படங்களுக்கு போட்டியாக இந்த படங்களா? என்ன நடக்குது இங்கே - வடிவேலு சொல்ற...

விஜய், அஜீத்குமார் படங்களுக்கு போட்டியாக இந்த படங்களா? என்ன நடக்குது இங்கே – வடிவேலு சொல்ற மாதிரி ரொம்ப சின்னப்புள்ள தனமாக இருக்குதே…

- Advertisement -

நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, 4 மாதங்களாக நடந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லைகா புரடக்சன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. மீண்டும் படப்பிடிப்பு துவங்க அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இப்போது நடிகர் விஜய் நடிப்பில், 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த கில்லி படம் கடந்த 20ஆம் தேதி தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் விஜய் இப்போது நடித்து வரும் கோட் படமும், செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

- Advertisement -

இந்த படத்துக்கு பிறகு, நடிகர் விஜய் தனது 69 வது படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார். அதன் பிறகு அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் கட்சியின் பணிகளில் முழு தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய் நடித்த கில்லி படம், மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கில்லி படத்துக்கு போட்டியாக, வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று அஜித் பிறந்தநாளை ஒட்டி மங்காத்தா படம் ரிலீஸ் செய்யப்படும் என்று ஒரு தகவல் வெளியானது. இப்போது மீண்டும் நடிகர் அஜித் குமார் நடித்த பில்லா 2 படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித் படத்துக்கு அஜித் படமே போட்டியாக மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறதா என்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

அது மட்டும் இன்றி நடிகர் விஜய் நடித்த கில்லி படம் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஜய் நடித்த மற்றொரு மெகா ஹிட் படமான போக்கிரி படமும் திரையரங்குகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கில்லி படம் போன்று போக்கிரி படத்தை ரசிகர்கள் பெரிதாக வரவேற்கவும் இல்லை. கொண்டாடவும் இல்லை.

ஏனெனில் போக்கிரி படம் ரி ரிலீஸானது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியவில்லை. கில்லி படம் போலவே நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கிய போக்கிரி படமும் நடிகர் விஜய்க்கு சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வெற்றிப் படம். ஆனால் கில்லி கிடைத்துள்ள வரவேற்பும், அமோக ஆதரவும் போக்கிரிக்கு இல்லை. இப்படி விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கு அவர்களது படங்களே போட்டியாக ரி ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்