- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த மாதம் 20ம் தேதி வெளியான லப்பர் பந்து; 26 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் வசூல்...

கடந்த மாதம் 20ம் தேதி வெளியான லப்பர் பந்து; 26 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் வசூல் இத்தனை கோடிகளா? அடேங்கப்பா என ஆச்சரியத்தில் திணறிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மனதை தொடும் நல்ல படங்கள் வெளி வருகின்றன. அதுவும் ரூ. 5 கோடி பட்ஜெட்டுக்குள் ஒரு தரமான படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் தவறுவதே இல்லை. நல்ல கதை, உணர்வுபூர்வமான திரைக்கதை, நம்பக்கூடிய உண்மையான விஷயங்கள் என யதார்த்தத்தை முன்வைத்து எடுக்கப்படும் படங்கள் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை தருகின்றன.

அந்த வகையில் காக்கா முட்டை, குட்நைட், பார்க்கிங், சித்தா, மகாராஜா சமீபத்தில் வெளியான வாழை மற்றும் லப்பர் பந்து உள்ளிட்ட படங்கள் அந்த வரிசையில் நல்ல தரமான படங்களாக ரசிகர்களின் மனதை கவர்ந்து பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கின்றன. கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை படங்களை தரும் இயக்குனர்களுக்கு மத்தியில், நல்ல படைப்புகளை தரும் இயக்குனர்கள் அரிதாகி விட்டனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த மாதம் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்திருந்தார். ஏற்கனவே பார்க்கிங் படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஹரீஷ் கல்யாண் லப்பர் பந்து படத்தில் நாயகனாகவும் அவரது மாமனார் கேரக்டரில் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படம் ரிலீஸான துவக்க நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி லப்பர் பந்து வெளியான போது இந்த படத்துடன் மொத்தம் 5 படங்கள் வெளிவந்தன. அதற்குப் பிறகு தொடர்ந்து இரண்டு பெரிய படங்கள் வெளிவந்தன.

- Advertisement -

அதில் ஒன்றுதான் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. இத்தனை படங்கள் வெளியான நிலையிலும், இன்னும் 150 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லப்பர் பந்து படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் வருகை அமோகமாக இருந்து வருகிறது.

லப்பர் பந்து படம் வெளியான 4 வாரங்களில் அதாவது 26 நாட்களில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 37.5 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரியவந்துள்ளது. அறிமுக இயக்குனர் இயக்கிய முதல் படத்தில், சின்ன நடிகர்கள் நடித்த இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 37.5 கோடி வசூல் வைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய படத்தின் தயாரிப்பை விட 6 மடங்கு வசூலை அதிகமாக லப்பர் பந்து படம் குவித்திருப்பது படக்குழுவினரை பெரிய அளவில் சந்தோஷப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்