தமிழில் பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0, சர்தார், லால் சலாம், இந்தியன் 2, பொன்னியின் செல்வன் பாகம் 1 பாகம் 2, கத்தி, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதில் வேட்டையன் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
துவக்கத்தில் கத்தி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த லைகா நிறுவனம். நிறைய படங்களை தயாரித்தது. ஆனால் லைகா நிறுவனத்திற்கு சமீபகாலமாக தயாரிப்பில் பலத்த நஷ்டங்களை படங்கள் கொடுத்து வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த தர்பார், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
ஆனால் கடந்த 10ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படம் ஒரே வாரத்தில் 220 கோடி ரூபாய் வசூலை அள்ளித் தந்திருக்கிறது. இதையடுத்து மீண்டும் ரஜினிகாந்த் தங்கள் லைகா நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடித்து கொடுக்க வேண்டும், சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்து தந்து உதவ வேண்டும் என்றும் லைகா தரப்பில் நேரில் ரஜினியிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த 2.0, லால் சலாம், தர்பார் போன்ற படங்கள் ரஜினி நடிப்பில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், வேட்டையன் படத்தை போலவே இன்னொரு வெற்றி படத்தை தங்கள் நிறுவனத்திற்கு தருமாறு லைகா நிறுவனம் ரஜினிகாந்துக்கு கோரிக்கை தந்துள்ளது. ஆனால் இன்னும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்தியன் 3 படம் எப்போது வெளியாகும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஏனெனில் இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வி படமாக இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் அமைந்து அவர்களது சினிமா பயணத்திலேயே இது ஒரு கருப்பு புள்ளியாக அமைந்துவிட்டது. இதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. அடுத்ததாக இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்ய அவர் தயாராக இருக்கிறார்.
ஆனால் இந்தியன் 2 படம் தந்த மோசமான தோல்விக்கு பிறகு, மிகப்பெரிய ஒரு வெற்றி படத்தை தந்த பிறகுதான் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் கமல் இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய தக்லைப் படம் வந்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெறும். அதனால் தக்லைப் படம் வந்த பிறகு இந்தியன் 3 படம் வெளியாகும் என்று தெரிகிறது. கமல் அந்த ஒரு முடிவில் தான் இருக்கிறார். இதனால் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்துக்கு பிறகு இந்தியன் 3 படத்தை வெளியிட ஏப்ரல் மாதம் வரை ஆகும் என்பதால் அப்செட்டில் இருக்கிறார். இதனால் இந்தியன் 3 படத்தை விரைவில் வெளியிட முடியாமல் லைகா நிறுவனமும் தவித்து வருகிறது.





