- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் திட்டுவதற்கு நான் ரொம்ப கொடுத்து வைத்தவன், அவர் அடித்தாலும் வாங்கிக் கொள்வேன் - வெளிப்படையாக...

அவர் திட்டுவதற்கு நான் ரொம்ப கொடுத்து வைத்தவன், அவர் அடித்தாலும் வாங்கிக் கொள்வேன் – வெளிப்படையாக பேசிய இயக்குனர் மிஷ்கின்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளிகளில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வாழ மீனும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டிதொட்டி எங்கும் டிரண்டிங் ஆனது.

தொடர்ந்து அஞ்சாதே என்ற படத்தில் இளம்பெண்களை கடத்தும் கும்பல் கதையை மையப்படுத்தி திரில்லான படம் தந்திருந்தார். இதில் பாண்டியராஜன், பிரசன்னா வில்லனாக நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற கத்தாழ கண்ணாலே குத்தாதே பாடலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படமும் அமோக வெற்றியை பெற்றது.

தொடர்ந்து துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய மிஷ்கின் மாவீரன் லியோ சவரக்கத்தி நந்தலாலா போன்ற படங்களில் நடிகராகவும் மிரட்டி வருகிறார். இசையமைப்பாளர் இளையராஜாவிடம் அடிக்கடி பிரச்னை செய்பவர் என்ற சர்ச்சை எப்போதும் மிஷ்கின் மீது இருந்து வருகிறது.

இதுகுறித்து இயக்குனர் மிஷ்கின் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இளையராஜா ஒரு மியூசிக் ஜீனியஸ். அவருடன் எனக்கு என்ன கருத்து வேறுபாடு? அவர் செருப்பால் அடித்தால் கூட வாங்கிக்குவேன். என் அப்பா அம்மாவுக்கு மேலாக அவரை பார்க்கிறேன். என் அம்மா இறந்து விட்டதாக தகவல் வந்து நான் போகும் போது வழியில், இளையராஜா செத்துவிட்டதாக போன் வந்தால், முதலில் இளையராஜாவை தான் பார்க்க போவேன். அங்குதான் அழுதுக்கொணடு இளையராஜாவுடன் இருப்பேன்.

இப்பக்கூட என்கூட சண்டை போட்டிருக்கிறார். என்னை பார்க்க வரக்கூடாது என்று கூறிவிட்டார். அதனால் என்ன, அவருக்கு முன்னால் நான் ஒன்றுமே சாதிக்கவில்லை. அவர் பெரிய மகான். அவர் என்னை அடித்தால் கூட அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ரொம்பவும் அன்பான மனிதர். ஆனால் கோபம் நிறைய வரும்.

நான் அப்படி பாட்டு கொடுங்க, இப்படி பாட்டு கொடுங்க என்று அவரை தொந்தரவு செய்வேன். கோபத்தில் அவர் என்னை வெளியே போடா என்பார். என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் கலந்த தாய் தான் எனக்கு இளையராஜா. அவர் என்னை திட்டுவதற்கு நான் கொடுத்து வைத்தவன் என்று இயக்குனர் மிஷ்கின் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்