- Advertisement -
Homeபொழுதுபோக்குநட்பே துணை படத்தின் நாயகி அனகா, விஜய் கட்சியில் இணைந்து விட்டாரா? கடைசியில் வெளிச்சத்துக்கு வந்த...

நட்பே துணை படத்தின் நாயகி அனகா, விஜய் கட்சியில் இணைந்து விட்டாரா? கடைசியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை – இவ்வளவு பெரிய காமெடி நடந்து போச்சா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் இப்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார். கடந்த 5ம் தேதி தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கேரளம் மாநிலம் பையனூரில் துவங்கியது. விஜய் நடித்த பாடல் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஷூட்டிங் பிரேக் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடத்துகிறார். வருகிற 27ம் தேதி இந்த அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. நடிகர் விஜய் இந்த மாநாட்டில்தான் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமாக பேச இருக்கிறார்.

- Advertisement -

அதனால் தமிழக அரசியலில் இந்த அரசியல் மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. திமுக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலியை பிடிப்பதுதான் தங்களது லட்சியம் என்று அரசியல் களத்தில் குதித்து இருப்பதாக நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் கட்சியில், இந்த மாநாட்டில் நிறைய பேர் சேர்வார்களா என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளில் உள்ள அதிருப்தி அரசியல்வாதிகள், அதேபோல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்த ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் பலரும் நடிகர் விஜய் கட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு நடிகை அனகா விஜய் கட்சியில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. இவர் ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்திலும், நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வைரல் ஆனது. இதற்கு என்ன காரணம் என்னவென்றால், அவர் காரில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அப்போது அந்த காரில் தவெக கட்சி கொடி முன்புறம் இருந்துள்ளது.

அதனால் கட்சிக்கொடி கட்டிய காரில் அனகா வந்து இறங்கியதால், அவர் விஜய் கட்சியில் இணைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் படத்துடன் தகவல் பரவியது. ஆனால் அவர் வந்தது ஒரு வாடகை டாக்ஸி என்பதும், அந்த காரை ஓட்டி வந்த கார் டிரைவர் தவெக கட்சி சார்ந்தவர் என்பதும் பின்னர் தெரிய வந்துள்ளது. அதனால் அனகாவுக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிறகு தெரியவந்துள்ளது. ஆனால் அதற்குள் அவர் விஜய் கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் பரவி பெரிய அளவில் வைரலாகி விட்டது. இதையறிந்த பலரும் வாய்விட்டு சிரிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்