- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார் திரைப்படத்தில் இந்த விஷயத்தை நான் அப்போதே கூறினேன்... ஆனால் படக்குழு கேட்கவே இல்லை... ம்ம்......

ஸ்டார் திரைப்படத்தில் இந்த விஷயத்தை நான் அப்போதே கூறினேன்… ஆனால் படக்குழு கேட்கவே இல்லை… ம்ம்… கரெக்டா தான்யா சொல்லி இருக்காரு நடிகர் கவின்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவர் கவின். அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ளடி பக்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி வெளியாகிறது. இதனை இயக்குனர் நெல்சன் தயாரித்திருக்கிறார்.

 

- Advertisement -

அவரிடம் உதவியாளராக இருந்த சிவ பாலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் கவின் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் மற்றும் டார்க் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிஸ் என்னும் படத்தில் கவின் நடித்துள்ளார்.

 

- Advertisement -

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இதனை இயக்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்க் படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் கவின். அவருடன் இணைந்து ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதுவும் சஸ்பென்ஸ் கலந்த திரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதன்பிறகு மூத்த நடிகை நயன்தாரா உடனும் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு வரிசைகட்டி இருக்கின்றன. அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதில் மிகவும் முதிர்ச்சியான தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார் கவின். இதனால் பலராலும் பாராட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியார் பிரேம காதல் படத்தை இயக்கி இருந்த இளன் இதனை எடுத்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

 

இந்நிலையில் படம் குறித்த பல்வேறு விஷயங்களை நடிகர் கவின் பகிர்ந்திருக்கிறார். இதன் கதை கேட்கும்போது நன்றாக இருந்தது. பைனல் அவுட் புட் வந்த பிறகு, படத்தைப் பார்க்கும்போது சில விஷயங்கள் lag அடிப்பதாக தோன்றியது. ஒரு 20 நிமிடங்கள் வரை கட் செய்ய கூறினேன். ஆனால் படக்குழுவினர் அது வேண்டாம் என்று கூறி கான்பிடென்ட் ஆக இருந்தனர். அதன் பிறகு நான் ஒன்றும் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்