- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்லி, லோகேஷைத் தொடர்ந்து அந்த காரியத்தில் இறங்கிய நெல்சன்... வெளியான மாஸ் அறிவிப்பு...

அட்லி, லோகேஷைத் தொடர்ந்து அந்த காரியத்தில் இறங்கிய நெல்சன்… வெளியான மாஸ் அறிவிப்பு…

- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் இயக்குனராக பணிபுரிந்தவர் நெல்சன். சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அந்த சமயத்தில் வெள்ளி திரைக்கு பயணிக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. முதலாவதாக சிம்புவை வைத்து அவர் படத்தை இயக்கினார்.

 

- Advertisement -

வேட்டை மன்னன் என இதற்கு டைட்டில் வைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வீடியோவும் வெளியானது. இதில் ஹன்சிகா மோத்வானி, விடிவி கணேஷ் உட்பட ஏராளமான நடித்துள்ளனர். ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இதன் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. முதல் திரைப்படமே இந்த கதிக்கு சென்று விட்டதால், கடும் வருத்தத்தில் இருந்தார் நெல்சன்.

 

- Advertisement -

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவேளை விட்ட அவர், அடுத்ததாக நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார். தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையே செலக்ட் செய்து நடித்து வந்த நயன்தாராவுக்கு, இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

 

நெல்சனுக்கும், ஒரு நல்ல என்ட்ரியாக அது அமைந்தது. இதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார் நெல்சன். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி கொடுக்கும் திரைப்படமாக டாக்டர் அமைந்தது.

 

இதன்பிறகு தளபதி விஜய் வைத்து அவர் எடுத்த பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்திக்க, ரஜினிகாந்துக்கு ஜெயிலர் திரைப்படத்தைக் கொடுத்து மீண்டு வந்தார். அந்த திரைப்படம் நெல்சலுக்கும் சரி ரஜினிக்கும் சரி மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. தற்போது அவர் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 

இதன் நடுவே தயாரிப்பு நிறுவனத்தையும் நெல்சன் ஆரம்பித்திருக்கிறார். இதற்கு பிளமென்ட் பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். அவரது உதவி இயக்குனர் சிவபாலன் தான் முதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார். வெறும் 46 நாட்களிலேயே இதன் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஏற்கனவே அட்லீ ஏ பார் ஆப்பிள் என்னும் ப்ரொடக்சன் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதே போல் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்திருக்க, அந்த வரிசையில் தற்போது நெல்சனும் இணைந்துள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்