- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் தொடர்ந்து தோல்வியை தழுவும் நட்சத்திர படங்கள்… வெகு எளிதாக ரசிகர்களின் மனங்ளை வெல்லும்...

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தோல்வியை தழுவும் நட்சத்திர படங்கள்… வெகு எளிதாக ரசிகர்களின் மனங்ளை வெல்லும் சின்ன படங்கள் – அதுதான் பேசும் என்பதை இயக்குனர்கள் உணர்வார்களா?

- Advertisement -

சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படமாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஜெயித்திருக்கிறது. இந்த படத்தை டைரக்ட் செய்தவர் 24 வயது இளைஞர் அபிஷன் ஜீவிந்த். இதுதான் அவரது முதல் படம். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தனது அழுத்தமான திரைக்கதையால் படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாமே மிக சாதாரணமான கலைஞர்கள்தான். இதில் பலரும் புதுமுக நடிகர்களாகவும் இருக்கின்றனர். சசிக்குமார் சிம்ரன் எம்எஸ் பாஸ்கர் இளங்கோ குமரவேல் ரமேஷ் திலக் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லாமே பெரிய அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமே இல்லாதவர்கள்தான்.

- Advertisement -

ஆனாலும் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சில கோடி ரூபாய்களில் உருவாக்கப்பட்ட இந்த படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த படத்தை சில தினங்களுக்கு முன் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் ஓடிடி தளத்திலும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

இந்த படம் ஜெயிப்பதற்கான ஒரே காரணம் சென்டிமென்ட் எமோஷனல்தான். ஒரு இலங்கை குடும்பம் சட்டவிரோதமாக ஒரு குடியிருப்பு பகுதிக்குள் குடியேறுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரிந்துவிடுகிறது. ஆனால் போலீஸ் அவர்களை தேடி வரும்போது அந்த ஏரியா மக்களே அந்த குடும்பத்தை தாங்கள் கொண்ட அன்பின் காரணமாக காப்பாற்றுவதுதான் இந்த படத்தின் கதை.

- Advertisement -

அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கம், கமல் சிம்பு நடிப்பு, ஏஆர் ரகுமான் இசை, திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் என நட்சத்திர நடிகர் பட்டாளம் என நடித்த தக்லைஃப் படத்தை ரசிகர்கள் தாறுமாறாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். இங்கு நட்சத்திர கலைஞர்கள் இருந்தும் இந்த படம் ஜெயிக்க முடியாமல் போக ஒரே காரணம் படத்தில் கதை என்பதே இல்லை என்பதுதான்.

இப்படி ஒரு மொக்கையான படத்தை எடுக்க மணிரத்னம் கமல் சிம்பு என ஜாம்பவான்கள் எதற்கு என்பதுதான் இதில் ரசிகர்கள் எழுப்பும் முக்கிய கேள்வி. அதிலும் திரிஷாவை இப்படி ஒரு கேரக்டரில் காட்டி அவருக்கு இருந்த ஒட்டுமொத்த இமேஜையும் மணிரத்னம் காலி செய்துவிட்டதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். கதை இருந்தால் அந்த படம் பேசும், இல்லை என்றால் அந்த படத்தை ரசிகர்கள் இழிவாக பேசுவார்கள் என்பதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி பெற்ற வரவேற்பும் தக்லைஃப் படத்துக்கு கிடைத்த விமர்சனமும் சிறந்த உதாரணங்களாகி விட்டன.

- Advertisement -

சற்று முன்