- Advertisement -
Homeபொழுதுபோக்குகுஷி 2 படம் குறித்து உளறிக்கொட்டி வம்பில் மாட்டிக்கொண்ட டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன்...

குஷி 2 படம் குறித்து உளறிக்கொட்டி வம்பில் மாட்டிக்கொண்ட டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் – தன்னிலை விளக்கம் தந்தால் சரியாயிடுமா? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக பிரியங்கா மோகன் இருந்து வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் என்ற படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷூடன் கேப்டன் மில்லர் என்ற படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார். அதையடுத்து சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

இந்த படங்கள் பெரிய அளவில் பிரியங்கா மோகனுக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. இதையடுத்து தொடர்ந்து சில படங்களில் பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். சமீபத்தில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற தெலுங்கு படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில், தமிழ் சினிமா இயக்குனரும் பிரபல வில்லன் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் குஷி 2 படம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் பேசியது சர்ச்சையாக மாறியது. அதில் எஸ் ஜே சூர்யா குஷி 2 படத்தை இயக்கினால் அதில் பவன் கல்யாணை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பிரியங்கா மோகன் கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் கோபப்பட்டு, பிரியங்கா மோகனை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.

தற்போது அதற்கு நடிகை பிரியங்கா மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பிரியங்கா மோகன் கூறுகையில், தற்போது நான் பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி படத்தில் நடிக்கிறேன். அந்த நேரத்தில் தான் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மேடை ஏறும்போது எல்லோரும் ஓஜி ஓஜி என்று கத்தத் தொடங்கி விட்டார்கள்.

- Advertisement -

அதனால்தான் நான் பவன் கல்யாண் நடித்த குஷி படத்தை குறிப்பிட்டு, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இருந்ததால், அந்த சமயத்தில் எனக்கு தமிழ் குஷி படம் ஞாபகத்துக்கு வரவில்லை. நாங்கள் அங்கு சென்றாலே குஷி 2 எப்போது என்று தான் கேட்பார்கள். அதனால்தான் நானும் ஒரு ரசிகையாக குஷி 2 எப்போது என்று எஸ் ஜே சூர்யாவிடம் கேட்டேன்.

எனக்கு 2 குஷி படங்களுமே பிடிக்கும். ஆனால் நான் முதலில் பார்த்தது விஜய் சார் நடித்த குஷி படத்தை தான். அந்த படத்தை பார்த்து விட்டுதான் நான் விஜய்க்கு ரசிகை ஆனேன் என்று கூறியிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் குஷி. இந்த படத்தில் ஜோதிகா ஜோடியாக நடித்திருந்தார். இதன் ரீமேக்காக தெலுங்கில் உருவான குஷி படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்