- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குது, அந்த நாளில் ஒரு...

வரும் ஜனவரி 16ம் தேதி விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குது, அந்த நாளில் ஒரு சூப்பரான அறிவிப்பு வரப்போகுது – போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு அற்புதமான நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் துணை நடிகராக சில படங்களில் முகம் காட்டிய அவர், இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். குறிப்பாக அவரது 50வது படம் மகாராஜா பெரிய வெற்றியை அவருக்கு தந்தது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக இப்போது விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சில வாரங்கள், போட்டியாளர்களை நேரடியாக தாக்கிப் பேசி கலாய்த்த விஜய் சேதுபதி, கடந்த 2 வாரங்களாக போட்டியாளர்களிடம் அடக்கி வாசிக்கிறார். அவர்கள் சொல்கிற விஷயங்களை மட்டுமே கேட்டுக்கொண்டு பேசுகிறார்.

நடிகர் கமல்ஹாசனை பொருத்த வரை, போட்டியாளர்களை நேரடியாக விமர்சனம் செய்ய மாட்டார். அவர்கள் எவ்வளவு கடுமையாக நடந்துக்கொண்டாலும் அதை வன்மையாக கண்டிக்கிறேன் என்பாரே தவிர, தனிமனித தாக்குதல் கமலிடம் 7 ஆண்டுகளாக இருந்தது இல்லை. ஆனால் விஜய் சேதுபதி சில நேரங்களில் எல்லை மீறி குத்திக்காட்டி பேசியதால் பிக்பாஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபடி, விடுதலை 2 படத்திலும் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி மாறி மாறி நடித்து வருகிறார். இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார். இதற்காக 2 மாதங்கள் தனியாக பரோட்டா மாஸ்டரை அழைத்து வந்து பயிற்சியும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏறி வந்த ஏணியை மறக்காத குணம் கொண்டவர் விஜய் சேதுபதி என்பதால், அவர் நடிகராக வளர்ந்த ஆரம்ப காலத்தில் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

அதனால் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்துள்ளார். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். வருகிற ஜனவரி 16 விஜய் சேதுபதியின் பிறந்த நாள். அன்று இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

சற்று முன்