- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்கள் உங்களிடம் நெருங்கி வருகிறார்களா? என்ன செய்யணும் தெரியுமா? வேட்டையன் பட நடிகை சொன்ன டிப்ஸ்...

ஆண்கள் உங்களிடம் நெருங்கி வருகிறார்களா? என்ன செய்யணும் தெரியுமா? வேட்டையன் பட நடிகை சொன்ன டிப்ஸ் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் திரையில் தங்களது அழகை மட்டுமே வெளிப்படுத்தி கவர்ச்சி காட்டி சினிமாவில் நீண்ட நாட்களுக்கு தாக்குப் பிடிக்கின்றனர். ஆனால் சில ஆண்டுகளில் அவர்களது அழகு குறைந்து தோற்றம் மாறும் பட்சத்தில், சீக்கிரமாகவே மார்க்கெட் இழந்து விடுகின்றனர்.

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே பல ஆண்டுகள் ஆனாலும் தங்களது இளமையை, அழகை அப்படியே பொத்தி பொத்தி பாதுகாத்து எப்படியோ கதாநாயகியாகவே நாட்களை கடத்தி விடுகின்றனர். அந்த வகையில் நடிகைகள் நயன்தாரா, திரிஷா போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அவர்கள் இருவரும் இப்போது வரை கதாநாயகிகளாகவே நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நயன்தாரா, திரிஷா ஆகியோரின் வயது 40 களை கடந்த நிலையிலும் அவர்கள் கதாநாயகிகளாக தமிழ் சினிமாவில் நீடித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. முன்பெல்லாம் கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் நடிகைகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை எல்லாம் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் கவர்ச்சியை நம்பாமல், நடிப்பை மட்டுமே காட்டி ரசிகர்களின் அபிமானம் பெற்றிருந்ததும் அதற்கு முக்கிய காரணம்.

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று என்ற படத்தில் ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை கேரக்டரில் நடித்திருந்தார். உண்மையிலேயே அவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் நடிப்பு இயல்பாக இருந்தது என்று ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரித்திகா சிங் சமீபத்தில் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் சில ஆக்சன் காட்சிகளில் ரித்திகா சிங் நடிப்பு சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, யாராவது உங்களை தாக்க வரும்போது முதலில் அவர்களின் தாக்குதலை தடுக்க வேண்டும். அதையடுத்து அவர்களது வயிற்றிலும் கழுத்திலும் மாறி மாறி குத்த வேண்டும். பின்னர் வலது புறக் கழுத்தில் குத்தினால், நம்மை தாக்கும் எதிரி செயலிழந்து விடுவார் என்று கூறி வேட்டையன் கூக் என்று பெயர் வைத்து இந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். ஆண்களை தாக்குவதற்கு பெண்களுக்கு பாடம் நடத்திய ரித்திகா சிங் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அரண்டு போய் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்