நடிப்பு திறமையை எங்கிருந்தாலும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் கலைத்துறையின் பொதுவான விதியாக இருக்கிறது. அந்த வகையில் கலைக்கு இனம், மொழி பாகுபாடு எதுவும் இல்லை. எங்கு இருந்தாலும் கலை ரசிக்கப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும் என்பதில் கலைத்துறை சார்ந்த ரசிகர்களுக்கு எந்த வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
அதனால்தான் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிற மொழி கலைஞர்கள் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் பிறமொழி கலைஞர்களை தமிழ் ரசிகர்கள் எப்போதுமே அங்கீகரிக்க மறுப்பதில்லை. மாறாக அவர்களை வரவேற்றுக் கொண்டாடி தீர்க்கிறார்கள். அப்படி பல நடிகர்கள் தமிழில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் வேலைக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனராக உள்ள பாசில் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு மரியாதை, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூ விழி வாசலிலே, பூவே பூச்சூடவா, கண்ணுக்குள் நிலவு உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியவர். இயக்குனர் பாசில் மகன் பகத் பாசில், மனைவி நடிகை நஸ்ரியா. இவர் ராஜா ராணி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்.
இந்நிலையில் வேலைக்காரன் படம் மூலம் ஒரு டீசண்டான ஒரு வில்லனாக ரசிகர்களை அசத்திய பகத் பாசில், அடுத்து நடித்த படம் விக்ரம். இந்த படத்தில் டிடெக்டிவ் ஏஜெண்டாக வேற லெவலில் ஒரு மாஸ் நடிப்பை தந்திருந்தார் பகத் பாசில். அந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த படம் மாமன்னன். இதன் ரத்தினவேலு என்ற கேரக்டரில் ஒரு ஜாதியின் அடையாளமாக, ஒரு தரமான சம்பவம் நடிப்பை அவர் தந்திருந்தார். இப்போது ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் பகத் பாசில் ரஜினி மகனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தில் பகத் பாசில் நடித்த ஆவேசம் என்ற மலையாள படம் திரைக்கு வந்தது. ஆடு ஜீவிதம், மஞ்சும்மெல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு படங்களைப் போலவே ஆவேசம் படமும் மிகப்பெரிய அளவில்வெற்றி பெற்றது. ஆவேசம் படம் உலகளவில் 150 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை புரிந்திருக்கிறது.
இப்போது ஆவேசம் படம் இப்போது ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை 35 கோடிக்கு ரூபாய்க்கு விலை பேசி வாங்கியிருக்கின்றனர். இதுவரை முன்னணி நடிகர் படங்கள் எதுவும் 35 கோடிக்கு உரிமம் விற்கப்படவில்லை என்ற நிலையில், பகத் பாசில் இந்த விஷயத்தில், அடித்து தூள் கிளப்பி இருக்கிறார் என்று ரசிகர்கள் அசந்து போய் அவரை பாராட்டி வருகின்றனர்.





