ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 130 கோடி பட்ஜெட்டில் உருவான படம் கருப்பு. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து அவரே இந்த படத்தில் பிரதான வில்லனாகவும் நடித்திருக்கிறார். நடிகர் சூர்யா திரிஷா ஷிவதா சுவாசிகா நட்டி நடராஜ் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
கருப்பு படம் நேற்று 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் ஆகாமல் ரத்து செய்யப்பட்டது. காலை 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து மதியம் மாலை இரவு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த படத்துக்காக ரூ. 150 கோடி வரை பைனான்ஸ் பிரச்னை இருந்ததாகவும் அதனால் கடைசி நேரத்தில் பைனான்சியர்கள் தரப்பில் நெருக்கடி தந்ததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே படத்தின் நாயகன் நடிகர் சூர்யா ரூ. 50 கோடி வரை அந்த கடனில் பொறுப்பேற்றுள்ளார்.
இவ்வளவு பெரிய கடன் பிரச்னை உள்ள சூழலில் ஏன் கடைசி நேரம் வரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த சிக்கல்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? கடைசி நேரம் வரை பிரச்னையை சுமூகமாக தீர்க்காததால் தானே படம் ரிலீஸில் பெரிய சிக்கல் ஏற்பட்டு படம் வெளியாவதே தடைபட்டது என்று சினிமா விமர்சகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இப்போது கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகாமல் போனதற்கு காரணமே தமிழக முதல்வர் விஜய்தான் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது இதற்கு முன்பு ஆளுங்கட்சியாக இருந்த முக்கிய அரசியல் பிரமுகர் இந்த படத்துக்காக ஒரு பெரிய தொகையை கடனாக தர ஒப்புதல் தந்திருக்கிறார்.
அந்த பெரிய தொகையை வைத்து பைனான்சியர்கள் பிரச்னையை மொத்தமாக தீர்க்க கருப்பு பட தயாரிப்பு நிறுவனமும் திட்டமிட்டுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் திமுக ஆட்சி மாறி இப்போது தவெக ஆட்சி வந்துவிட்டது. தமிழக முதல்வராக விஜய் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார். அதனால் அந்த திமுக அரசியல் பிரமுகர் தருவதாக சொன்ன பெரிய தொகையை கடைசி நேரத்தில், ஆட்சி மாற்றம் காரணமாக தர இயலாத சூழல் என மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.





