- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழை பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் அவங்க அப்பாவோட கதையாம்… ஹீரோ...

வாழை பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம் அவங்க அப்பாவோட கதையாம்… ஹீரோ யார் தெரியுமா? – அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அதீத கவனமும் வரவேற்பும் பெற்ற மாரி செல்வராஜ் அடுத்ததாக தனுஷ் நடித்த கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்தப் படமும் அவருக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

தொடர்ந்து 3வது படமாக உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு பகத் பாசில் லால் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது படங்கள் அனைத்துமே சாதியம் உரிமை பேசும் படங்களாக தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் மாரி செல்வராஜ் படம் வெளியாகும் போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை சந்திப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அவர் இயக்கிய 3 படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. வசூலை குவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மாமன்னன் படத்தில் காமெடி நடிகர் வடிவேலு குணச்சித்திர பாத்திரத்தில் மிகச் சிறப்பான அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார்.

இதையடுத்து மாரி செல்வராஜ் வாழை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் அவரது சிறுவயதில் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தினமும் வாழை தார்களை சுமந்து செல்லும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை திரைபிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டிய நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் பலரும், இதுபோன்ற ஒரு மோசமான படமே இல்லை என்று சொல்லும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

குறிப்பாக டீச்சர் மீது மாணவனுக்கு ஏற்படும் காதல், படத்தின் இறுதியில் லாரி கவிழ்ந்து ஏற்படும் விபத்து போன்ற சம்பவங்கள் இதுவரை நடக்காத பெரிய அதிசயங்கள் போல படத்தில் காட்டப்பட்டிருந்தது. பல காட்சிகளில் அபத்தங்களே நிறைந்திருந்தன. இதுபோன்ற வறுமையான வாழ்க்கை, இப்போதும் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் தினமும் ஏழை எளிய மக்கள், சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளாக தான் இருக்கின்றன.

இந்நிலையில் வாழை படம் சமீபத்தில் வெளியான நிலையில் பலரும் இந்த படத்தை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். ஆஹா ஓஹோ என்று புகழும் அளவுக்கு இந்த படத்தில் எந்த விஷயமுமே இல்லை. வாழை படத்தை பில்டப் பணியே 30 கோடி ரூபாய்க்கு மேல் மாரி செல்வராஜ் சம்பாதித்து விட்டார் என்றும் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதை மாரி செல்வராஜின் அப்பாவின் கதை என்று கூறப்படுகிறது. இப்படி அப்பா, மாமா, சித்தப்பா என்று மாரி செல்வராஜின் சொந்தக் கதையை எடுக்க தான் தமிழ் சினிமா இருக்கிறதா, அவர்களது வாழ்க்கையை படமாக பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு வேலையா என என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்