- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி... இணையத்தில் எழுந்த வார்த்தை மோதல்... சினிமாவைக் கடந்து அரசியலுக்கு...

அஜித்தை பாராட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி… இணையத்தில் எழுந்த வார்த்தை மோதல்… சினிமாவைக் கடந்து அரசியலுக்கு சென்ற பதிவு…

- Advertisement -

அஜித் குமார் நடிப்பை தாண்டி கார்பந்தயம் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுவது ட்ரோன் உருவாக்குவது என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும், கார் பந்தயத்தில் ஈடுபட இருக்கிறார். துபாயில் நடைபெறும் சர்வதேச கார்பந்தயத்தில் கலந்து கொள்ளும் அஜித்குமார் அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

 

- Advertisement -

இதற்கான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முக்கியமாக அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து துணை முதலமைச்சர் உதயநிதி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

 

- Advertisement -

அதில், துபாயில் நடைபெற இருக்கும் கார்பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகரும் நண்பருமான அஜித்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது கார் பந்தயம் தொடர்பான ஹெல்மெட் மற்றும் உபகரணங்களில் அஜித் பொருத்தி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

 

முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பார்முலா 4 ரேஸிங் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித் சாருக்கு அன்பும், நன்றியும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் அமைச்சர் டிஆர்பி ராஜாவும் அஜித்திற்கு வாழ்த்து கூறினார்.

 

தற்போது இணையத்தில் கடவுளே அஜித்தே என்ற ஹேஷ்டாக் அதிகளவு பகிரப்பட்டு வரும் சூழலில், அமைச்சர் டிஆர்பி ராஜா அஜித்தே என்று குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் விஜயை கோபப்பட வேண்டும் என்று நினைத்தே துணை முதலமைச்சர் இந்த பதிவை வெளியிட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் விமர்சித்தனர்.

 

அஜித்தை பாராட்டுவதாக நினைத்து எதற்கு திராவிட மாடலைக் கொண்டு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் இணையத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில், நடிகர் விஜய் திராவிட மாடல் அரசு என்று ஒரு குடும்பமே ஊழலில் ஈடுபடுவதாக திமுகவை தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்