- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் கடைசி திரைப்படத்தில் நிச்சயம் இது இருக்காதாம்... என்னங்க சொல்றீங்க... இதை எப்படி தளபதி ரசிகர்கள்...

விஜயின் கடைசி திரைப்படத்தில் நிச்சயம் இது இருக்காதாம்… என்னங்க சொல்றீங்க… இதை எப்படி தளபதி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்…

- Advertisement -

அரசியலில் தற்போது தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் நடிகர் விஜய். அண்மையில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடத்தினார். அதில் விஜயின் பேச்சைக் கேட்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.

 

- Advertisement -

மாநிலத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராகவும் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராகவும் தனது கருத்துக்களை முன்வைத்தார் விஜய். திராவிடமும் தமிழ் தேசியமும் தான் தனது கொள்கை என்று அவர் கூறினார். மிக முக்கியமாக தன்னுடன் கூட்டணியில் வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் அறிவித்தார் தளபதி விஜய்.

 

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை விஜய் நடத்தினார். இதில் நீட் தேர்வு ரத்து உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இந்த நிலையில் தனது கடைசி திரைப்படத்தை முடிப்பதற்கான பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். எச் வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தை, கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இது ஆந்திரா மற்றும் கர்நாடக திரையுலகில் முக்கியமான படங்களை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 

அதன்படி பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, இந்த திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக வருகிறார். மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், நரேன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். காவல்துறை சார்ந்த கதைக்களமாக இது உருவாக இருக்கிறது.

 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மிக சிறிய அளவே இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முந்தைய விஜய் திரைப்படங்களின் பட்ஜெட் 400 கோடி 500 கோடி என்ற அளவில் இருக்கும். படத்தின் வசூலும் அதற்கு ஏற்றார் போலையே இருக்கும். இப்படியான சூழலில் தான் இந்த திரைப்படத்தின் பட்ஜெட்டை மிகவும் குறைத்து குறைந்த காலத்தில் படத்தை எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் சார்பில் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்