பாலிவுட் நடிகர்களில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் இந்தியில் பல மாஸ் வெற்றி படங்களை கொடுத்தவர். இந்தி பட உலகில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சமீபத்தில் அவர் நடித்த பதான், ஜவான் போன்ற படங்கள் ரூ. 1000 கோடிகளை தாண்டி வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஜவான் படத்தை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி இயக்கினார் என்பதும், ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, மற்றும் விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரூ. 1150 கோடிக்கு மேல் வசூலை கடந்து சாதனை படைத்தது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர்தான் நடிகர் ஷாருக்கான். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உயிரே என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. நடிகர் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்திலும் ஷாருக்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால் ஷாருக்கான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராகவே இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 29ம் தேதி நடிகர் ஷாருக்கான் தனது 59 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், ரசிகர்களுகு்கு நல்ல செய்தி சொல்வதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், நான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன். தினமும் 100 சிகரெட் வரை பிடித்துக் கொண்டிருந்த நான் இப்போது அந்த பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு வெளியே வந்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார். சிகரெட் பிடிப்பதை விட்ட பிறகு மூச்சு பிரச்சனை ஏற்படாது என்று நினைத்தேன். ஆனால் இன்னும் அந்த உணர்வு இருப்பதாகவும், இறைவன் நாடினால் விரைவில் அதுவும் சரியாகிவிடும் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஷாருக்கான் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
தினமும் 100 சிகரெட் வரை பிடித்துக் கொண்டிருந்த நடிகர் ஷாருக்கான், இப்போது உடல் நலத்தை பாதிக்கும் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக கூறியிருப்பது பாலிவுட் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. ஷாருக்கின் பிறந்தநாள் பரிசாக ஏற்றுக் கொண்டு அவர்கள் சந்தோசமடைந்து வருகின்றனர். தமிழ் சினிமாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அதிக சிகரட் பிடித்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக அவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





