- Advertisement -
Homeபொழுதுபோக்குகாசு வாங்கறீங்கல்ல, கடுப்பான பிரபு தேவா... பார்க்கவே பயமாக இருந்தது... சிலர் ஓடிவிடலாம் என்று கூட...

காசு வாங்கறீங்கல்ல, கடுப்பான பிரபு தேவா… பார்க்கவே பயமாக இருந்தது… சிலர் ஓடிவிடலாம் என்று கூட நினைத்தார்கள்.. பிரபு தேவாவின் மறுபக்கத்தை சொன்ன தாமு

- Advertisement -

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து பல ஹீரோக்களின் நண்பனாக நடித்தவர் நகைச்சுவை நடிகர் தாமு. இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், மாதவன் என பல ஹீரோக்களின் படங்களிலும் நண்பனாக நடித்திருக்கிறார். விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களான லவ் டுடே, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், பத்ரி, கில்லி, போக்கிரி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் கில்லி திரைப்படத்தில் தாமு ஏற்றிருந்த ஓட்டேரி நரி கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. தற்போது நடிப்பிலிருந்து விலகி, கல்வி தொடர்பான ஆலோசராக செல்பட்டுவருகிறார்.

அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான இவர், நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவாவுடனும் இணைந்து பல்வேறு படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவருடன் நடித்த ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ என்னும் பாடல் எடுக்கப்பட்டபோது நடந்த அனுபவம் பற்றி தாமு சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

- Advertisement -

அந்த பாடலை நான் தான் துவங்குவேன். அந்த பாடலுக்கான ஒத்திகை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. ஒத்திகை நேரத்திலேயே பிரபு தேவா எங்களை பெண்டு எடுத்துவிட்டார். ஷூட்டி ஸ்பாட்டில் 6 மணிக்கு மேல் பாடலை படமாக்க துவங்கினர். அப்போது ஒரு சிறு தவறு செய்தால் கூட பிறகு தேவா கோபப்படுவார்.

காசு வாங்குறீங்கள்ல, ஒழுங்கா பண்ணுங்க என்று திட்டுவார். அவரை பார்க்கவே பயமாக இருக்கும். அவரிடம் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால், அந்த பாடல் எடுக்கப்பட்ட பின் சிறப்பாக வந்திருந்தது. எல்லோரும் ஒரே மாதிரி ஆடும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருந்தது. “ஊத்திகினு கடிச்சிக்கவா” பாடல் படமாக்கப்பட்ட போது சிலர் அங்கிருந்து ஓடிவிடலாம் என்று கூட நினைத்தார்கள். அந்த அளவிற்க்கு அவர் ஸ்ட்ரிக்ட். உண்மையில் பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியர் என்றார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் விவேக்கும், நானும் பாலச்சந்தரின் சிஷ்யன்கள். விவேக்கை முதன்முறையாக பார்த்தபோது, அவருடைய மிமிக்கிரி திறமையை பற்றி வியந்ததை அவரிடமே கூறினேன். விவேக்கிற்கு தானாகவே காமெடி வரும். சக நடிகர்கள் கவுண்டர் கொடுத்தாலும் விவேக் அதை மகிழ்ச்சியாக பார்ப்பார். அவரிடம் பொறாமை குணம் இல்லை.

சின்னி ஜெயந்த் எனக்கு சீனியர். மிமிக்கிரி நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஒன்றாக செல்வோம். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரே பணம் தருவார்கள். ஆனால் சின்னி ஜெயந்த் உடன் சென்றால் அவர் பணம் கொடுத்த பின்பே எங்களை அழைத்துச் செல்வார். சார்லி தனக்கான திறமையை உணர்ந்து செயல்படுவார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் கலகலன்னு இருக்கும் என்றார் தாமு.

- Advertisement -

சற்று முன்